தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார். அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் உண்மையிலேயே அவருடன் பழகியவர்களுக்குத்தான் அஜித்தை பற்றி நன்கு தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று. பல பிரபலங்கள் அஜித்தை பல வகைகளில் புகழ்ந்து பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் விக்ரமன் அஜித்தை பற்றி கூறியது மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. அதாவது புதிய மன்னர்கள் படத்தில் அஜித்தான் நடிக்க வேண்டியிருந்ததாம். அதில் எந்த கேரக்டர் என விக்ரமன் சொல்ல மறுத்துவிட்டார்.
அந்த நேரத்தில் அஜித் சர்ஜரி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அதனால் புதிய மன்னர்கள் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என விக்ரமன் கூறினார். மேலும் அஜித்துக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என விக்ரமன் கூறினார்.
அதன் காரணமாகத்தான் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் கெஸ்ட் ரோல் என்றதும் எதுவும் யோசிக்காமல் நடித்துக் கொடுத்தாராம் அஜித். அதைப் போல ராஜ்குமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்திலும் அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்க விக்ரமன்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததும் நீ வருவாய் என படத்திலும் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என ராஜ்குமாரன் விக்ரமனிடம் சொன்னாராம். மேலும் அஜித்திடம் நீங்கள்தான் பேசவேண்டும் என ராஜ்குமாரன் கூறினாராம்.
அப்போதும் அஜித் ஒரு ஆப்ரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட விக்ரமன் மற்றும் ராஜகுமாரன் அஜித்தை பார்க்க மருத்துவமனைக்கே சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் விக்ரம நீ வருவாய் என படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதை பற்றி கூறியிருக்கிறார். அதற்கு அஜித் நீங்கள் சொன்னால் வில்லனாக நடிக்கக் கூட தயார் என கூறினாராம் அஜித்.
இதை பற்றி கூறிய விக்ரமன் ‘இது எவ்ளோ பெரிய வார்த்தை? எப்போதுமே அஜித்துக்கு என் மீது ஒரு மரியாதை இருக்கும்’ என கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…