Categories: Cinema News latest news

விடாமுயற்சி படத்தில் அஜித் பெயர் இதுவா?.. இத அவரே செலக்ட் பண்ணாராம்.. சுவாரஸ்ய தகவல்..!

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் மகிழ்திருமேனி. இந்த திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆனது தான் மிச்சம்.

ஆனால் தற்போது சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே விடாமுயற்சி திரைப்படம் குறித்த டாபித்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் நிச்சயம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் வெளியாகிவிடும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் லைக்கா நிறுவனம் திடீரென்று பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாது என்கின்ற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதனால் சற்று அச்சத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலருடன் இணைந்து ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தார்கள் விடாமுயற்சி படக்குழுவினர். ஒரு வழியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

மேலும் திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் படம் தற்போது ரீசென்சார் செய்யப்பட்டு நேரம் சற்று அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் படத்தின் புரமோஷன் வேலைகளும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. பொதுவாக அஜித் திரைப்படம் என்றாலே அதற்கு ஆடியோ லான்ச் நடைபெறாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரையும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதன்படி இயக்குனர் மகிழ் திருமேனி ஊடகங்களுக்கு சென்று பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து பல சுவாரசியங்களை பேசி வருகின்றார்.

‘விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல். பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தில் ரீமேக். இந்த திரைப்படம் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைத்து இருக்கின்றோம். அஜித்தின் வழக்கமான படங்களை போல் இல்லாமல் விடாமுயற்சி சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அஜித் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கின்றேன்.

நான் முதலில் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு அஜித் எதற்காக என்னை தேர்வு செய்தார் என்கின்ற கேள்வி என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதைக் கேட்கும் முன்பே அஜித் சார் என்னிடம் கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது வரை இப்படி ஒரு படத்தை நான் எடுத்தது கிடையாது. எனக்கு இது ஒரு புது அனுபவம்.

பஞ்சு, வசனங்கள் போன்ற விஷயங்கள் இல்லாமல் உருவான அஜித்தின் படமாக விடாமுயற்சி நிச்சயம் இருக்கும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் அர்ஜுன். இந்த பெயரை அஜித் தான் தேர்வு செய்தார். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன்தான் நடித்திருக்கின்றார்’ என்று மகிழ்ந்திருமேனி அந்த பேட்டியில் கூறி இருக்கின்றார்.

ramya suresh
Published by
ramya suresh