Connect with us

Cinema News

டி.ஆருக்கு மியூஸிக் சொல்லிக் கொடுத்ததே நான்தான்! இது எங்க கொண்டு போய் நிறுத்தப் போகுதோ?

தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞன் டி ராஜேந்திரன். அவரைப் பார்த்தால் கிண்டல் பண்ண தோன்றும். கேலி பண்ண தோன்றும். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் இந்த அளவுக்கு மக்களால் போற்றப்படுகிறார் என்றால் மிகப்பெரிய திறமையை உள்ளடக்கிய ஒரு மனிதனாகத்தான் இந்த சினிமாவில் பார்க்கப்படுகிறார். சினிமாவில் அவருக்கு தெரியாத எதுவுமே கிடையாது. சிறந்த பாடலாசிரியர் ,சிறந்த இசை அமைப்பாளர் ,சிறந்த பாடகர் ,சிறந்த இயக்குனர் என பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு நல்ல கலைஞன் டி ராஜேந்திரன்.

டி ராஜேந்திரன் என்று சொன்னதும் சட்டென நம் நினைவுக்கு வருவது தாடி ,ரைமிங் டயலாக் ,வாடா என் மச்சி என இவற்றை சொல்லலாம். இவருடைய முதல் படம் ஒருதலை ராகம் .இதில் கதாசிரியர் பாடல் ஆசிரியர் இசை அமைப்பாளர் என மூன்றையும் டி ராஜேந்திரன் தான் மேற்கொண்டார். 80களில் கொடி கட்டி பறந்த ரஜினி கமல் இவர்களுக்கு சக போட்டியாளராக மாறியவரும் இவர்தான். அண்ணன் தங்கை பாசத்திற்கு பேர் போனவர். அவருடைய பெரும்பாலான படங்களில் தங்கை மீது அதிகம் பாசம் கொண்ட அண்ணன் ஆக ஏதாவது ஒரு வகையில் ஒரு கேரக்டரை வைத்து விடுவார்.

இவருடைய டைம் என்பது 80களில் ஆரம்பித்து 90களுக்கு முன்பே முடிந்து விட்டது. அந்த பத்து வருட இடைவெளியில் ஏராளமான படங்களை இயக்கி இன்றுவரை தனக்கென ஒரு தனி முத்திரை பதித்திருக்கிறார் டி ராஜேந்திரன். இந்த நிலையில் நடிகர் பப்லு டி ராஜேந்திரன் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். ஒரு தாயின் சபதம் என்ற படத்தில் பப்லு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். அதில் ஹீரோயினிடம் பப்லு மிரட்டல் விடுவது போன்ற வசனம் பேச வேண்டும்.

அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்பாட்டில் டி ராஜேந்திரன் அவர் வாயாலயே ரீ ரெக்கார்டிங் மியூசிக் போட்டு இருக்கிறார். திடீரென பப்லுவுக்கு எங்கிருந்து சவுண்டு வருகிறது என அக்கம் பக்கம் பார்க்க அங்கிருந்தவர்கள் பப்லுவை அமைதிப்படுத்த நீங்கள் நடிக்க மட்டும் செய்யுங்கள். அவர் ரியல் ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கிறார் என சொன்னார்களாம். உடனே பப்லு இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென சத்தம் கேட்டால் நான் சிரித்து விடுவேன் என சொல்லி இருக்கிறார் .

அதற்கு முன் அப்படித்தான் இருக்கும் நீங்கள் உங்களுடைய வசனத்தை பேசுங்கள் என அவரிடம் சொல்லி இருக்கிறார்கள். இப்படி நேரலையாகவே படப்பிடிப்பில் ரீ ரெக்கார்டிங் செய்வார் டி ராஜேந்திரன் என பப்லு கூறினார். அதேபோல் இன்னொரு காட்சி எடுக்கும் பொழுது அவருக்கு மியூசிக் சட்டென வரவில்லையாம். ஏதாவது யோசி என பப்லுவிடமும் டி ராஜேந்திரன் சொல்லி இருக்கிறார்.

babloo

babloo

பப்லு அங்கிருந்த பிரம்மாண்ட செட்டை பார்த்து யம்மா அப்படின்னு சொன்னாராம். இதை பிடித்து கொண்ட டிஆர் கரெக்ட் இதுதான் வேணும் என சொல்லி யம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு மியூசிக் போட்டாராம். உடனே பப்லுவுக்கு சந்தோஷம் நான் சொன்னதிலிருந்து மியூசிக் போட்டு விட்டார். டிஆருக்கே நான் தான் மியூசிக் கற்றுக்கொடுத்தேன் என அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டாராம் பப்லு .இதை ஒரு பேட்டியில் பப்லு கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top