Connect with us

Cinema News

பிரச்சனை எல்லாருக்கும் ஒண்ணுதான்… சாமியாராய் மாறிய தனுஷ்…?! இட்லி கடை விவகாரம் தான் காரணமா?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சனை இருக்கும். அது உண்மைதான். இதுல வரும் உணர்வுகள் ஒண்ணுதான். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி. ஏழையாக இருந்தாலும் சரி. அவரவர் தகுதிக்கேற்ப பிரச்சனை வரும். ஆனால் அதனால் உண்டாகும் மனவலி ஒண்ணுதான்.

இட்லிகடை செட்ல தீ விபத்து ஆனது. அதே போல அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் தனுஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் 6 வருடத்துக்கு முன் தனுஷூக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்தார். தனக்கு பழைய சம்பளத்துக்குப் படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என சொன்னார். அப்போது தனுஷ் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தார்.

இப்போது படம் நடித்துக் கேட்கிறார். ஆனால் அவரது சம்பளம் இப்போது உயர்ந்துள்ளதால் சம்பளம் இப்ப உள்ள பிசினஸ்படி தரணும் அல்லது படத்தை வெற்றிமாறன் இயக்கணும் என்று சொல்லிவிட்டாராம். அந்த வகையில் தயாரிப்பாளர் கதிரேசன் இதுதான் சரியான சமயம் என தனுஷ் தயாரித்து இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்துக்கு தடை விதிக்க முயற்சியில் இறங்கினார்.

தனுஷூக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்றெல்லாம் பிரச்சனையைக் கிளப்பினார். அப்போது 6 கோடி வரை தர தனுஷ் தரப்பு சம்மதித்ததாம். ஆனால் 16 கோடி வரை கேட்டாராம். அந்தப் பஞ்சாயத்து ஒருபுறம் போய்க்கொண்டுள்ளது. இதற்கிடையே ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து பிரச்சனையிலும் தனுஷின் பெயர் அடிபட்டது. இப்படி பிரச்சனை மேல் பிரச்சனை வந்தால் யார் தான் தாங்குவார்? அதனால் ஒரு தடவை தனுஷே இதற்கு ஒரு விளக்கம் அளித்து பதிலடி கொடுத்து இருந்தார்.

தனுஷ், ஐஸ்வர்யாவே விவாகரத்து, சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே பிரச்சனை… இப்படி ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கியுள்ள தனுஷ் பிரச்சனை குறித்து என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

நீங்க 150 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 200 ரூபாய்க்கு பிரச்சனை வரும். இதுவே நீங்க 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு பிரச்சனை வரும். எல்லாருக்கும் ஒரே பிரச்சனைதான் என்கிறார் தனுஷ்.

தனுஷின் இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்க்கும் போது பழம் தின்று கொட்டை போட்டு அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்து பக்குவப்பட்ட சாமியார் பேசுவது போல தெரிகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top