Connect with us

Cinema News

மதுபோதை சர்ச்சை.. காதலில் பிரேக்கப்.. தொடர் ஃபிளாப் படங்கள்!.. கெரியரை இழந்த ஜெய்!…

Actor jai: சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. ஒரு சின்ன வேடம் கிடைக்காதா.. ரசிகர்களிடம் பிரபலமாக மாட்டோமா என ஆயிரக்கணக்கானோர் காத்து கிடக்கிறார்கள். சிலருக்கு வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளமாட்டார்கள். சினிமா பின்னணி கொண்டவராக இருந்தால் சினிமாவில் நுழைவது சுலபம். ஆனால், அதில் நீடிக்க உழைக்க வேண்டும்.

அப்படி சினிமாவில் நுழைந்தவர்தான் நடிகர் ஜெய். இசையமைப்பாளர் தேவாவின் தங்கை மகன் இவர். இதனால், வாய்ப்பு இவருக்கு சுலபமாக அமைந்தது. விஜய் ஹீரோவாக நடித்த பகவதி படத்தில் அவரின் தம்பியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு பெரிதாக நடிப்பு வரவில்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளித்தார்.

அதன்பின் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 28, கோவா போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், எங்கேயும் எப்போதும் படம் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். கதை நன்றாக இல்லை என்பதால் இந்த படங்கள் ஓடவில்லை.

இதில், அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படம் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின் ஜெய் நடித்த படங்கள் ஓடவில்லை. இடையில் நடிகை அஞ்சலியுடன் இவருக்கு காதலும் ஏற்பட்டது. ஆனால், என்ன காரணமோ அது பிரேக்கப்பில் முடிந்துவிட்டது. ஒருபக்கம், இரவில் நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி பண்ணிவிட்டு மதுபோதையில் காரை ஓட்டி வந்து போலீசாரிடம் 2 முறை சிக்கினார் ஜெய்.

அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். ஒரு நாள் ஜெய்யும், பிரேம்ஜியும் வந்த கார் சென்னை அடையாறு அருகே ஒரு இடத்தில் மோதி நின்றது. உள்ளே இருவரும் மட்டையாகி கிடந்தார்கள். இப்படி ஜெய் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். ஒருபக்கம், படப்பிடிப்பில் அவர் ஓவராக பந்தா பண்ணுவதாகவும் செய்திகள் வெளியானது. இதனாலேயே சரியான பட வாய்ப்பு இல்லாமல் கெரியரை இழந்திருக்கிறார் ஜெய். அதோடு, 40 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளமால் இருக்கிறார்.

இவரின் நண்பரான பிரேம்ஜி கூட திருமணம் செய்து கொண்டு நல்ல பிள்ளையாக செட்டில் ஆகிவிட்டார். ஆனால், ஜெய் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நல்ல சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் அதை தக்க வைத்து கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் ஜெய்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top