Categories: Cinema News latest news

பார்டரில் பஞ்சதந்திரம் பார்த்துட்டுதான் தூங்குவேன்!.. நடிகரிடம் சொன்ன ராணுவ வீரர்!..

Panchatanthiram: கமல் சீரியஸான நடிகராக இருந்தாலும் பல காமெடி படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறர். அப்படி அவர் காமெடி செய்த எல்லா படங்களிலும் வசனம் எழுதியவர் கிரேஸி மோகன்தான். கமல் – கிரேஸி மோகன் கூட்டணியில் மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே சம்மந்தம், பஞ்ச சந்திரம் போன்ற படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

கிரேஸி மோகன் எழுதிய வசனங்களை கமல் மிகவும் சரியான டைமிங்கில் உச்சரித்த்து அசத்துவார். அதுவும், காதலா கதலா படத்தில் கமல் பேசும் வசனங்கள் புரிந்து சிரிப்பதற்குள் அடுத்த வசனத்தை பேசி திணறடிப்பார்கள். படம் முழுக்க தொடர்ந்து காமெடி வசனங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

அதேபோல், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜெயராம், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்னன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து 2002ம் வருடம் வெளியான பஞ்ச சந்தந்திரம் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி படமாக இருக்கிறது. இந்த படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை சிரிக்க வைத்திருப்பார்கள் பலருக்கு ஃபேவரைட்டாக இப்படம் இப்போதும் இருக்கிறது.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய நடிகர் ஜெயராம் ‘ஒரு படத்திற்காக காஷ்மீருக்காக சென்றிருந்தேன். அந்த படத்தில் துப்பாக்கியால் சுடுவது போல காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. எனவே, டம்மி துப்பாக்கிகளை எடுத்து சென்றோம். ஒரு வேனில் நான் சென்று கொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் எங்களை சூழ்ந்தனர். அது தடை செய்யப்பட்ட பகுதி என என்பது எனக்கு தெரியாது.

நீங்கள் யார்?.. இது என்ன துப்பாக்கி?.. என துப்பாக்கி முனையில் விசாரித்தனர். சினிமா ஷூட்டிங் என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த ட்ரூப்பில் தமிழ் தெரிந்த ஒரு ராணுவ வீரர் இருந்தார். அவர் என்னை பார்த்துவிட்டு நிலைமையை சமாளித்தார். அதன்பின் என்னை தனியே அழைத்துக்கொண்டு போய் பேசினார்.

ஒரு மலை உச்சியை காட்டி அதில்தான் எனக்கு வேலை. தினமும் 15 மணி நேரங்களுக்கு மேல் பாதுகாப்பு பணியில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் நடித்த பஞ்சதந்திரம் படம் பார்த்து சிரித்துவிட்டுதான் தூங்குவேன். வேலை பளுவை அதுதான் குறைக்கிறது என சொன்னார். அது எனக்கு பெருமையாக இருந்தது. பஞ்சதந்திரம் போன்ற ஒரு படத்திற்காக கிரேஸி மோகன் சாருக்கு நன்றி சொல்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Published by
சிவா