Connect with us

Cinema News

நாசர் அம்மா அப்பாவைத் தவிக்க விட்டாரு… இப்போ ஞானி மாதிரி பேசுறாரு… நொந்து போய் பேசும் அண்ணன்

நடிகர் நாசர் அப்பா, அம்மாவை சரியாகக் கவனிக்கல என்றும் அதனால் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று வீடியோ ஒன்றில் அவரது அண்ணன் ஜவஹர் நாசர் இப்படி தெரிவித்துள்ளார்.

அம்மா, அப்பாவை 35 வருஷமா நானே பார்த்துக்கிட்டேன். அவங்க மனைவி எம்.பி.சீட்டுக்கு எலெக்ஷன்ல நிக்க ஆரம்பிச்சாங்க. ‘நீ எங்க வீட்டுல எல்லாரையும் ஒதுக்கி வச்சிருந்தே. இப்போ வந்து அரசியலுக்குப் போக ஆசையா’ன்னு நாசர்கிட்ட கேட்டேன்.

எலெக்ஷன்ல நிக்கக்கூடாது: ‘முதல்ல எலெக்ஷன்ல நிக்கக்கூடாது’ன்னு சொன்னேன். இங்கே குடும்பம் ஒழுங்கு இல்லை. சொல்ற மாதிரி அண்ணன், தம்பிங்க யாருமே இல்லை. நான் ஏற்கனவே அம்மா, அப்பாவைப் பற்றி நாசர் கவனிக்கலன்னு வீடியோவுல சொன்னேன். ஆனா அவன் அதுக்கு பதில் சொல்லிருக்கணும். ‘நான் தான் கவனிச்சேன்’னு சொல்லிருக்கணும்.

ரொம்ப வேதனை: ஆனா நாசர் சொல்லவே இல்லை. எனக்கு ரொம்ப வேதனை ஆகிடுச்சு. ஒரு பக்கம் அம்மா, அப்பாவைப் பார்க்கணும். இன்னொரு பக்கம் 50வயசான மனவளர்ச்சி குன்றிய தம்பியைப் பார்க்கணும். என் குடும்பத்தையும் பார்க்கணும். இதை எல்லாம் பார்க்க பார்க்க எனக்குக் கோபம் வரும். நாசரும் தம்பி தானே.

கல்யாணம்கூட பண்ணல: நான் மட்டும் ஏன் பார்க்கணும்னு எனக்குள்ள ஒரு வெறி வந்துடுச்சு. இந்த சூழல்ல நான் கல்யாணம்கூட பண்ணிக்க முடியல. இப்ப எனக்குன்னு யாருமே இல்லை என்று குமுறுகிறார் அண்ணன் ஜவஹர். அது மட்டும் இல்லாமல் ஜவஹர் மேலும் அந்த வீடியோவில் இப்படி சொல்கிறார்.

பேரப்பசங்களும் தெரியாது: எங்க அம்மா, அப்பா நாசர் வீட்டுக்கே போனதில்ல. ரெண்டு மூணு தடவை தான் போயிருப்பாங்க. அவங்களுக்கு பேரப்பசங்களும் யாருன்னே தெரியாது. நாசர் என்ன பண்ணிட்டான்னா நான் வெளிய போய் அரசாங்கத்துட்ட உதவி கேட்கப் போற நேரத்துல என்னோட அம்மா, அப்பாவை அவனுக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி ஒரு கிராமத்துல கொண்டு போய் வச்சிட்டான்.

ஞானி மாதிரி பேசுறாரு: அங்க ஒரு அரசு ஆஸ்பத்திரியில அப்பாவைச் சேர்த்துருக்கான். அங்க ஒரு மாசம் இருந்தாரு. அப்புறம் இறந்துட்டாரு. அம்மாவை சிஆர்எம். மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயிட்டான். சரி. எங்க பேமிலிய விடுங்க. நாசரோட பசங்களையே அவரு படிக்க வைக்கலையே. அவன் என்னமோ இப்ப ஞானி மாதிரி பேசுறாரு என்கிறார் ஜவஹர் நாசர். இவர் நடிகராகவும், பிசனஸ் மேனாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top