Connect with us

Cinema News

அப்பாவிடம் உள்ள ஒரே மைனஸ் அதுதான்… நடிகர் பாண்டியனின் மகன் சொன்ன சோகம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகம் என்றைக்குமே சோடை போனதில்லை. அந்த நடிகரின் பேரும் புகழும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் நடிகர் பாண்டியன். படத்தில் நடிக்க பல எதிர்ப்புகள் வந்தபோதும் பாரதிராஜா இவரை நம்பி எடுத்த படம் தான் இது. அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அபாரமான அதே நேரம் யதார்த்தமான நடிப்பை நடித்து அனைத்துத் தரப்பினரையும் அசத்தி விட்டார் பாண்டியன்.

அவரது மகன் ரகு தனது அப்பாவைப் பற்றி பல நினைவுகளை எடுத்துச் சொல்கிறார். அவரை ஏமாற்றி பலரும் முன்னுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.

மைனஸ் பாயிண்ட்: அப்பாவுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் உண்டு. அவருக்கு இருக்கற ஒரு மைனஸ் பாயிண்ட் குடிப்பழக்கம். அது ஒண்ணு இல்லன்னா அவரைப் பிடிக்க முடியாது. ஆனா அவர் ஒரு ரியல் ஹீரோ. வெகுளி. அவரை வச்சி நிறைய பேரு பெரிய ஆளா வந்தாங்க. ஆனா கடைசி நேரத்துல கைகொடுக்காம போயிட்டாங்க. நல்ல பழகுற மாதிரி பழகி அவரை டவுன் ஆக்கிட்டுப் பெரிய ஆளா வந்துருக்காங்க.

பணத்தோட அருமை தெரியல: எங்க அப்பாவுக்கு பணத்தோட அருமை தெரியல. யார் யாரை எந்தெந்த இடத்துல வைக்கணும்னு தெரியல. எல்லாத்தையும் ஒரே மாதிரி நம்பிட்டாரு. பாரதிராஜா சார், டி.ராஜேந்தர் சார், பிரபு பெரியப்பா, கார்த்திக் சார் இவங்க எல்லாம் உள்ளே வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் இதான் ஃபீல்டு. பணம் இருந்தா தான் வருவாங்க.

எடுத்துச் சொல்ல யாரும் இல்லை: கொடுக்காமலும் இருக்க முடியாது. கஞ்சத்தனமாகவும் இருக்க முடியாதுன்னு தெரியும். ஆனா எங்க அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. பக்கபலமா அப்படி ஆளுங்களும் இல்லை. அபபாவுக்குப் பிறகு பெரியப்பா, பாட்டியும் இறந்துட்டாங்க. அம்மாதான் வளர்த்து படிக்க வச்சாங்க.

உலகத்தையே மறந்துடுவேன்: அப்பா நடிச்சதுல ரொம்ப பிடிச்ச படம் மண்வாசனை. முதல் வசந்தம், ஆண்களை நம்பாதே படங்கள் ரொம்ப பிடிக்கும். அப்பாவும் நானும் சூர்ய வம்சம், வாரணம் ஆயிரம் படங்கள் பார்த்துருக்கோம்;. அப்பாவைப் பார்த்ததும் உலகத்தையே மறந்துடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top