தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கோலிவுட்டின் ராஜாவாக இருந்தார் பிரசாந்த்.அஜித், விஜய் இவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்து ஒரு முன்னணி நடிகராக இருந்தார். சொல்லப்போனால் விஜய் அஜித் இருக்கும் போதே பிரசாந்தின் மார்கெட்தான் அதிகமாக இருந்தது.
இதனிடையில் அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவிலும் அவரால் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. அதனாலேயே சினிமாவில் அவருக்கான இடம் என்பது காலியாகவே இருந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தும் விஜயும் சொல்லமுடியாத வளர்ச்சியை அடைந்தார்கள்.
இனி ரஜினி கமலுக்கு அடுத்த படியாக அஜித் விஜய் என்று மாறியது. இந்த நிலையில் நீண்ட நாளுக்கு பிறகு அந்தகன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் அந்த செய்தி வைரலானது. ஆனால் படம் எடுத்தும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தனர். இதற்கிடையில்தான் விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிப்பதாக செய்திகள் பரவின.
அதுவும் விஜய் படம் என்றதும் படத்தின் ஹைப்புக்கு காரணமாகிப் போனது. இந்த நிலையில் அந்தகன் படம் வரும் 9 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் பிரசாந்த்.
அவரிடம் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனா அல்லது ஃபிரண்டா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாந்த் ஃபர்ஸ்ட் சிங்கிள் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே ஃபிரேமில் நான் ,பிரபுதேவா, விஜய் என ஒன்றாக ஆடியிருப்போம். அப்போது எங்களுக்குள் எந்தவொரு ஈகோவோ போட்டியோ இல்லை. அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறோம் என கூறினார். அதுமட்டுமில்லாமல் படம் பெரிய அளவில் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் நீங்கள் சிங்கிளா? என தொகுப்பாளினி கேட்க, அதற்கு பிரசாந்த் முரட்டு சிங்கிள் என கூறினார். மேலும் சிங்கிளாவே இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் கமிட்டாகத்தானே செய்யனும் என தொகுப்பாளினி கேட்க , அதற்கும் பிரசாந்த் ‘ஆமா, நான் மேரேஜூக்கு ரெடி. சீக்கிரம் நடக்கும். வரப் போகிற பெண் ஒரு பொண்ணா இருக்கனும்’ என பதிலளித்திருக்கிறார் பிரசாந்த்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…