1949 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் நடிகர் ராஜேஷ். அவர் ஒரு தொடர்கதை படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1979 ஆம் ஆண்டில் வெளியான கன்னி பருவத்திலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ராஜேஷ். டும் டும் டும், ராம், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
எழுத்தாளர் அவதாரமெடுத்து 9 புத்தகங்களை எழுதியுள்ளார் ராஜேஷ். கடைசியாக விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் ராஜேஷ். யூடியூப்பில் பல பிரபலங்களை நேர்காணல் நடத்தி அவர்களுடான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இவர் சினிமாவிற்கு வரும் போது சிவாஜியை விட நான்தான் நல்ல நடிகன் என்ற எண்ணத்துடன்தான் வந்தார்.
ஆனால் வந்த பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது. சிவாஜி எப்பேற்பட்ட நடிகர் என்று. நடிகர், எழுத்தாளர் என்பதையும் தாண்டி சிறந்த அறிவாளி ராஜேஷ். பேச்சிலும் எழுத்திலும் நேர்மையை பார்க்க முடியும். சினிமாவில் தெரியாத விஷயங்களே கிடையாது. மிகவும் நுணுக்கத்துடன் எதையும் கையாள்வார் ராஜேஷ். இந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் எஸ்விசேகர் ராஜேஷை பற்றி கூறும் போது நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்தான். அவருடைய நிறைவேறாத ஆசை என்னவெனில் எப்படியாவது கமலை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கடைசிவரை அது நடக்கவே இல்லை என்று எஸ்விசேகர் கூறினார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…