Connect with us

latest news

மனைவி பிரியாவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ரஞ்சித்!. இது செம ரொமான்ஸ் வீடியோ!…

Biggboss Tamil: 90களில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரஞ்சித். ஹீரோ, வில்லன் என கலக்கியர் இவர். மம்முட்டி நடித்து சூப்பர் ஹிட் அடித்த மறுமலர்ச்சி படத்தில் ரஞ்சித்தின் நடிப்பு பாராட்டப்பட்டது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாறி பீஷ்மர், கவுண்டம்பாளையம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில், கவுண்டம்பாளையத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதராகவும், வேறு ஒரு சாதிக்கு எதிராகவும் கருத்துக்களை சொல்லி இருந்தார். இதனால், கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார். இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் அவரை பிரிந்தார்.

இருவரும் விவகாரத்தும் பெற்றனர். அதன்பின் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார் ரஞ்சித். இவர் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி மகள் ஆவார். அவருடனான திருமண வாழக்கையும் வெகுநாள் நீடிக்கவில்லை. அவரிடமிருந்தும் பிரிந்துவிட்டர்.

சில வருடங்கள் கழித்து விவகாரத்து செய்த முதல் மனைவி பிரியா ராமனோடு ரஞ்சித் மீண்டும் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாகவே வசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஒருபக்கம், கடந்த சில வருடங்களாகவே முழுநேர சீரியல் நடிகராக மாறிவிட்டார். பாக்கியலட்சுமி சீரியல் இவரை பெண்களிடமும் பிரபலப்படுத்தியது. தற்போது நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் 8வது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கினார் ரஞ்சித். பல நாட்கள் அங்கு தாக்குப்பிடித்த ரஞ்சித் நேற்று எவிக்‌ஷன் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் இருந்த போது அவரை ஆதரித்து பேட்டி கொடுத்து வந்தார் பிரியா ராமன். இந்நிலையில்தான், எவிக்‌ஷன் ஆகி ரஞ்சித் வெளியே வரும்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் பிரியா ராமனும் அமர்ந்திருந்தார். அதோடு, அங்கிருந்தவாறே அவர் ரஞ்சித்துக்கு ஃபிளையிங் கிஸ்ஸை பறக்கவிட, அவரைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தும் அவருக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து ரொமான்ஸ் செய்தார். அவரிடம் விஜய் சேதுபதி ‘ஹேப்பியா சார்?’ என கேட்க, அவர் ‘ரொம்ப ஹேப்பி’ என சொல்லும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

Continue Reading

More in latest news

To Top