Categories: Cinema News latest news

சைலண்ட் கில்லர் விஜய்.. அரசியலுக்கு இந்த தகுதி போதாதா?.. நடிகர் சொல்றத கேளுங்க!…

இன்று தமிழ் நாட்டு அரசியலில் பெரும் பூகம்பமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். தனியாக கட்சி ஆரம்பித்து பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி பல அரசியல் தலைவர்களை பந்தாடி விட்டார் விஜய். இவரின் எழுச்சிமிக்க பேச்சு, விறுவிறுப்பான செயல் என அதகளமாகியிருக்கிறது தமிழ் நாட்டின் அரசியல். முதல் மாநாட்டில் இவருடைய கொள்கைகளை கூறியதும் சீமான் காண்டாகிவிட்டார்.

உடனே விஜய்க்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை கூற ஆரம்பித்தார். அவ்வளவுதான் சீமான் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தராக கழற ஆரம்பித்தனர். ஏன் திருமாவளவன் கட்சியில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்த ஆதவ் அர்ஜூனா கூட இப்போது விஜயின் பக்கம்தான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார் விஜய்.

சமீபத்தில் தனது கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆனதை ஒட்டி விழா நடத்தினார். அந்த விழாவிற்கு பிரசாந்த் கிஷோரை வரவழைத்து மற்ற கட்சியினருக்கு ஷாக் கொடுத்தார். இப்படி ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறார் விஜய். ஒருவர் அரசியலுக்கு வந்துவிட்டால் கூடவே விமர்சனமும் வரத்தான் செய்யும். அப்படித்தான் விஜய்க்கும் வருகிறது. அதிலும் குறிப்பாக என்ன செய்துவிட்டார் விஜய்? யாருக்கும் ஏதாவது உதவி செய்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இதை பற்றி பிரபல நடிகர் சம்பத் ராமிடமும் கேட்கப்பட்டது. சம்பத் ராம் விஜயுடன் வில்லு,புலி, திருப்பாச்சி போன்ற ஏழு படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நண்பரும் இன்னொரு நடிகருமான ஒருவர் வேறொரு நடிகரின் பெரிய படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அவரும் விஜயுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறாராம். அந்த நடிகரின் படத்தின் ஒரு காட்சியில் கப்பலில் இருந்து கீழே குதிக்க வேண்டும்.

அந்த நடிகரும் குதிக்க அடியில் பெரிய கற்களில் மோதி அவருடைய கால் முறிவு ஏற்பட்டதாம். அவரால் நடக்கக் கூட முடியவில்லையாம். உடனே அந்த பட நிறுவனம் மருத்துவமனையில் சேர்த்து அன்று ஆகும் செலவுக்கான தொகையை மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார்களாம். உடனே இந்த நடிகர் விஜயின் மேனேஜருக்கு போன் செய்து நிலைமையை கூறினாராம்.

உடனே விஜய் அந்த நடிகரை தன்னுடைய படப்பிடிப்பிற்கு வரவழைத்து நலம் விசாரித்து ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவிக்கு வைத்துக் கொள் என்று சொன்னாராம் விஜய். தன்னை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் விஜய் என சம்பத் ராம் அந்த பேட்டியில் கூறினார்.ஆனால் சத்தமாக பேசமாட்டார். வசனம் பேசினாலும் பக்கத்தில் இருக்கும் எங்களுக்கு கூட கேட்காது. ஆனால் டப்பிங்கில் கொளுத்திவிடுவார். மிகவும் சைலண்டான ஆளு விஜய் என்றும் சம்பத் ராம் கூறினார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்