Connect with us

Cinema News

6 ரூபாயிற்கு தள்ளுபடி கேட்டு நின்ற நடிகர் சூர்யா… அவருக்கே இந்த நிலைமையா?

நடிகர் சூர்யா தற்போது கோடிக்கணக்கில் சம்பாரித்தாலும் அவரின் ஆரம்பக்காலம் ரொம்பவே சோதனைகளை சந்தித்தது தான்.

நடிகர் சூர்யா, வேலை பார்த்து முதல்முறையாக வாங்கிய சம்பளத்தில் அவருடையா தாய்க்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்தாராம். அந்த பரிசையும் அவ்வளவு எளிதாக அவரால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன். கங்குவா ரிலீஸுக்காக அன்பான ஃபேன்ஸ் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்தாலும், ஆரம்பத்தில் நடிக்கும் ஆர்வமே இல்லாமல் இருந்தவர்தான் சூர்யா.

படித்து முடித்ததும் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலைக்காக முயற்சி செய்திருக்கிறார். சிவக்குமாரின் மகன் என்று சொல்லாமல், கிட்டத்தட்ட ஒரு மாதம் நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்துக்கு நடையாய் நடந்து வேலையும் வாங்கியிருக்கிறார்.

டிரெயினியாக முதல் மாதம் ரூ.1,200 அவருக்கு ஊதியமாகக் கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தை வைத்து அம்மாவுக்கு ஒரு சேலை வாங்கிக் கொடுக்கலாம் என நினைத்த சூர்யா, தங்கை பிருந்தாவை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குப் போயிருக்கிறார். இருவரும் சேர்ந்து அம்மாவுக்கு ஒரு சேலையைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அந்த சேலையின் விலையைக் கேட்டபோது ரூ.1,256 என்று சொல்லவும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கையில் இருந்த சில்லறைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ரூ.1,250 ரூபாய் வரை சேர்த்திருக்கிறார்கள். அதன்பின்னர், 6 ரூபாய் தள்ளுபடி செய்யும்படி கடைக்காரரிடம் கேட்டு, கையிலிருந்த காசுக்கு அந்த சேலையை வாங்கி அம்மாவுக்குப் பரிசளித்தாராம் சூர்யா.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top