Categories: Cinema News latest news

சூர்யா படத்துக்கு மட்டும் மோசமான விமர்சனம்? ஜோதிகாவோட ஃபீலிங் நியாயமா?

நடிகர் சூர்யாவின் சமீப கால படங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. அவர் கடைசியாக பிரம்மாண்டமாக நடித்த படம் கங்குவா. ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவோ ரொம்ப பந்தாவாக படம் 2000 கோடியை வசூலித்து சாதனை படைக்கும் என்றார். அதற்கு சூர்யாவும் பெரிசா ஆசைப்படுறதுல என்ன தப்புன்னு கேட்டார்.

சமூக ஊடகங்கள்: இதை எல்லாம் கேட்டுக்கொண்டு சமூக ஊடகங்கள் சும்மா இருக்குமா? படம் வரட்டும் பார்க்கலாம் என்று பொறுமையாக இருந்தனர். படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வரவே அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலான ஊடகங்களில் படத்தைப் போட்டுத் தாளித்து எடுத்தனர்.

தடை போட முடியாது: இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தவே ஊடகங்கள் படத்தின் விமர்சனத்தை உடனே கொடுக்கக்கூடாது என்றெல்லாம் கோர்ட்டில் தடை செய்ய வழக்குத் தொடுத்தனர். ஆனால் விமர்சனம் செய்வதில் தடை போட முடியாது. அது அவர்கள் சுதந்திரம் என்று தீர்ப்பானது.

சர்ச்சையில் ஜோதிகா: இதுபோன்ற சம்பவங்கள் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும் பெரிதும் பாதித்து இருக்கும். அதனால் சமீபகாலமாக அவர் கொடுக்கும் பேட்டிகள் சர்ச்சையை உண்டு பண்ணுகின்றன. அந்தவகையில் இப்போதும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவை எல்லாம் பெரிய மனதுடன் விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால் என் கணவர் படங்களைப் பொருத்தவரை கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன்.

கடுமையான விமர்சனங்கள்: படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில மோசமானப் படங்களை விட கடுமையான விமர்சனங்களை சந்தித்ததை பார்த்த போது அது என்னை பாதித்தது. ஊடகங்கள் இதை அறிந்து கொள்ளாததற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன் என்கிறார் ஜோதிகா.

நியாயமா?: ஜோதிகா கங்குவா படத்துக்கு நெகடிவிடியாக விமர்சனங்கள் வந்ததும் முதல் ஆளாக இன்ஸ்டாவில் மற்ற நடிகர்களின் படங்களைத் தாக்கிப் பேசி ரசிகர்களிடம் வசை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலிவுட்ல கொஞ்சம் பிசியாக இருக்குறதால பேரு வாங்கிக் கொடுத்த தமிழ்த்திரை உலகை சாடி வருவது நியாயமான்னு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v