சமீபத்தில் மதகஜராஜா பட விழாவில் விஷால் கைநடுங்க பேசியதைப் பார்த்ததும் அவருக்கு என்னாச்சு என்பதே பெரிய ட்ரோல்லாகப் போய்க் கொண்டு இருந்தது.விஷால் குறித்து மதகஜராஜா படத்தில் நடித்த விச்சு விஸ்வநாத் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
பேமிலி என்டர்டெயினர்: மதகஜராஜா எப்ப வந்தாலும் அது நிச்சயமா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும்னு இயக்குனர் சுந்தர்.சி. சொல்லிருக்காரு. இது பக்கா பேமிலி என்டர்டெயினர் மூவி. 12 வருஷத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இப்ப வருது. அதே நேரத்துல படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும் இருக்கு. இந்தப் படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமான்னு பார்க்கலாம்.
இது கமர்ஷியல் மூவி. அந்த சமயத்தில் நிதிப்பிரச்சனையில் சிக்கியதால் படம் அப்போது ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இடையில் சுந்தர்.சி, விஷால் ஆகியோர் கேட்டும் இந்தப் படத்தை அப்போதும் ரிலீஸ் பண்ணாமல் இருந்தார்கள்.
8 பேக்: ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பு நிறுவனமே ரிலீஸ் பண்ண நினைத்ததால்தான் இந்த தாமதம். அந்தப் படத்துல தான் 8 பேக் போட்டுருப்பாரு விஷால். அதுக்காக அவர் சாப்பாடுகூட சாப்பிடமாட்டாரு. பிரியாணி வச்சா முகந்து பார்த்துட்டுப் போயிருவாரு. சந்தானம் காமெடியும் சூப்பரா வந்துருக்கு.
103 டிகிரி குளிர்ஜூரம்: மதகஜராஜா பட விழாவில் விஷாலுக்கு மைக் பிடிக்கும்போது கை நடுங்கக் காரணம் குளிர் ஜூரம்தான். 103 டிகிரி இருந்தது. அன்னைக்கு ட்ரிப்ஸ் எல்லாம் ஏத்திருந்தாங்க. வரணுமான்னு நாங்க கேட்டோம். இல்ல நான் வர்ரேன்னு அந்தக் கஷ்டத்துலயும் வந்தாரு. அதை நிறைய பேரு ட்ரோல் பண்ணி எழுதுறாங்க. அவரு உடல்நிலை இப்போ சரியாயிடுச்சு.
மனசாட்சியே இல்ல: பாலா படத்துல நடிச்சதால, நிறைய டிரிங்ஸ் சாப்பிடுறதாலயோ இப்படி ஆச்சுன்னு சொல்றது எல்லாம் சும்மா. எழுதுறவங்க எழுதுறாங்க. ஒருத்தரைப் பார்த்து யூடியூப்ல பரிதாபப்படுறது கிண்டல் பண்றது சர்வசாதாரணமாச்சு. மனசாட்சியே இல்லாம பண்றாங்க. அவங்க வீட்டுல யாருக்காவது வந்ததுன்னா இப்படி எல்லாம் சொல்வாங்களா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…