Connect with us

Cinema News

விஜயகாந்த் போலதான் விஜய்யும்!.. எல்லாமே நான் போட்ட பிளான்.. எஸ்ஏசி சொல்றத பாருங்க!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகர் விஜய் திடீரென்று அரசியலில் கால் பதித்திருக்கின்றார். கடந்த வருட பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் மிகச்சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார்.

தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் சமீப நாட்களாக கோலிவுட் வட்டாரங்களில் நடிகர் விஜய் தொடர்ந்து அரசியலில் பயணித்தாலும் கேப் கிடைக்கும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று கூறி வருகிறார்கள்.

நாளை ஜனவரி 26 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தலைப்பு ஏற்கனவே நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமான திரைப்படத்தின் தலைப்பு ஆகும்.

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நாளைய தீர்ப்பு. இந்த திரைப்படம் தான் நடிகர் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி படு பிஸியாக நடித்து வந்தார். இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் தளபதி 69 திரைப்படத்திற்கும் இந்த படத்தின் தலைப்பு தான் வைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். அவரின் பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியிருந்ததாவது ‘விஜயின் கடைசி திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்கின்ற டைட்டில் வைக்க இருப்பதாக தகவல் வருகின்றது. அது உண்மையா என்பது தெரியவில்லை. ஒரு வேலை அப்படி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

அவரது முதல் படத்தின் டைட்டில் அதுதான். விஜய்யின் கடைசி படம் டைட்டிலும் அதுவாக இருந்தால் மகிழ்ச்சி தான். மேலும் விஜயின் அரசியல் வருகை என்பது முன்பே திட்டமிட்டு இருந்தது. நான் இயக்கிய பல படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கின்றார். எனது படங்கள் எப்போதும் சமூக அக்கறை கொண்ட படங்களாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கும் போது விஜயகாந்த் மக்களின் பிரச்சினைகளை பேசும் ஒரு நடிகராக நடித்து வந்தவர்.

பின்னர் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தலைவராக மாறினார். அன்று எப்படி விஜயகாந்த் மாறினாரோ அதேபோல்தான் தற்போது விஜய்யும் மாறி இருக்கின்றார். எல்லாமே ஏற்கனவே நான் திட்டமிட்டது தான். விஜய்க்கு இவ்வளவு அன்பை கொடுக்கும் மக்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். அது சரியாகத்தான் இருக்கும். பல இளைஞர்கள் விஜய்யை பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது’ என்று பேசி இருக்கின்றார்.

Continue Reading

More in Cinema News

To Top