Connect with us

Cinema News

விஜய்சேதுபதியின் டெடிகேஷனுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா! அந்த சீனில் இப்படித்தான் நடிச்சாரா?

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் விஜய்சேதுபதி கோலிவுட்டில் எந்தவொரு பிரஸ்டீஜும் பார்க்காமல் அனைவரிடத்திலும் எதார்த்தமாக பழகி வருகிறார். அனைவரிடத்தில் சகஜமாக பழகக் கூடியவர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர் இன்று இந்த கோலிவுட்டையே தன் கைவசம் வைத்திருக்கிறார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதிக்கு தென் மேற்கு பருவக்காற்று திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இருந்துதான் ஹீரோவாக அறிமுகமாகினார். அதிலிருந்து தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்து இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார்.

ஹீரோவாகவே நடித்து வந்த விஜய்சேதுபதி பேட்ட திரைப்படம் மற்றுமொரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. ஏனெனில் அந்தப் படத்தில் இருந்துதான் அவர் வில்லனாக அவதாரம் எடுத்தார். அதையும் மக்கள் ரசிக்க தொடங்கினார்கள். அதிலிருந்து இன்று வரை வில்லனாகவே பல படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் ஒரு மறுபிறவியை கொடுத்தது.

ஹீரோவாக நீண்ட நாளுக்கு பிறகு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்த்து மணிரத்னமே ஷாக் ஆன சம்பவம் பற்றி சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம்.

அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய் சண்டை போட்டுக் கொண்டு மோதிக் கொள்வார்கள். அப்போது அங்கு இருக்கும் விஜய்சேதுபதியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்க வேண்டும் என மணிரத்னம் சொல்லவே இல்லையாம். ஆனாலும் அவர்கள் மோதிக் கொள்ளும் போது விஜய்சேதுபதி கொடுத்த ரியாக்‌ஷனை பார்த்து எப்படி இத பண்ண? என மணிரத்னமே ஆச்சரியத்தோடு கேட்டாராம்.

அதற்கு விஜய்சேதுபதி ‘கசாப்புக் கடையில் கோழி அடங்கும் வரை அமைதியாக இருக்கும். அப்படித்தான் மூணு பேரும் அடிச்சிக்கிட்டு சாகட்டும்னு அமைதியாக இருந்தேன்’ என பதில் கூறினாராம் விஜய்சேதுபதி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top