சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அப்படி கிடைத்தும் அதை தக்கவைப்பதில் இருக்கும் சிரமம் இருக்கே? அது அதை விட பெரிய விஷயம். ஆனால் இங்கு ஒரு நடிகை அவர் போட்ட கண்டீசனால் ஒட்டுமொத்த கெரியரையும் ஸ்பாயில் செய்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. வி6 ஃபிலிம் சார்பில் வேலாயுதம் தயாரிக்கும் திரைப்படம்தான் ‘நாற்கரப்போர்’.
இந்தப் படத்தை வெற்றி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தில் சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்க ஹீரோயினாக அபர்னதி நடிக்கிறார். படத்தில் வில்லனாக சுரேஷ் மேனன் நடிக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றுதான் சென்னையில் நடந்தது.
அந்த விழாவிற்கு படக்குழுவுடன் சேர்ந்து மற்ற திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்து கொண்டார். ஆனால் படத்தின் ஹீரோயின் அபர்னதி மட்டும் வரவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் இப்போதுதான் தெரியவந்தது.
படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும் என அபர்னதியிடம் கூட வரமாட்டேன் என மறுத்துவிட்டாராம். இதை சுரேஷ் காமாட்சியிடம் வேலாயுதம் தெரிவிக்க உடவே சுரேஷ் காமாட்சி அபர்னதியை தொலைபேசியில் அழைத்து ப்ரோமோஷனுக்கு வருவதை பற்றி கூறியிருக்கிறார்.
ஆனால் அபர்னதியோ ப்ரோமோஷனுக்கு வர வேண்டுமென்றால் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறினாராம். இது சுரேஷ் காமாட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடவே சில கண்டீசன்களையும் அபர்னதி போட்டாராம். அது அதைவிட பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது.
அதாவது ப்ரோமோஷனுக்கு வந்தால் என் பக்கத்தில் யார் உட்கார வேண்டும்? உட்கார கூடாது என்றெல்லாம் பற்றி கண்டீசன் போட்டாராம் அபர்னதி. இது வேலைக்கே ஆகாது என நினைத்த சுரேஷ் காமாட்சி தொலைபேசியை துண்டித்து விட்டாராம். அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்து அபர்னதியே சுரேஷ் காமாட்சிக்கு போன் செய்து ‘என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். ப்ரோமோஷனுக்கு வருகிறேன்’ என கூறினாராம்.
ஆனால் நேற்று நடந்த ப்ரோமோஷனுக்கு அபர்னதி வரவில்லை. போன் செய்து கேட்டால் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என சொல்லிவிட்டாராம். இதை பற்றி சுரேஷ் காமாட்சி கூறும் போது ‘அவங்க அவுட் ஆஃப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். தயவு செய்து இந்த பக்கம் வர வேண்டாம்.வராமல் இருக்கிறதுதான் சினிமாவிற்கு நல்லது. இதை ஏன் நான் இங்கு கூறுகிறேன் என்றால் அபர்னதியை பற்றி மற்ற தயாரிப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ’என கூறினாராம்.
அபர்னதி வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற படத்தில் அறிமுகமானார்.விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படத்திலும் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் அபர்னதி.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…