Connect with us

Cinema News

சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

பூனைக்கண் புவனேஸ்வரி:

ஒரு காலத்தில் பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் அப்படி ஒரு பிரபலமாக இருந்தார். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கிய நடிகையாக தான் புவனேஸ்வரி இருந்தார். அவருடைய சிறப்பு அம்சமே அவருடைய கண். அதில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. பெண்கள் கூட அவருடைய அழகில் மயங்கி போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு அழகான முகம் கொண்ட நடிகையாகவும் இருந்தார் .ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த புவனேஸ்வரி பாய்ஸ் படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரையில் நுழைந்தார் .

முதல் படத்திலேயே தன்னுடைய கவர்ச்சியை காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு கந்தா கடம்பா கதிர்வேலா என்ற திரைப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கிளாமர் காட்டி நடித்தார் என்றால் தெலுங்கில் காமெடியுடன் கவர்ச்சியை காட்டி நடித்தவர் புவனேஸ்வரி. ஒரு கட்டத்தில் இவருடைய மவுசு அதிகமாக தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

bhuvaneshwari

bhuvaneshwari

கிளாமர் நடிகை:

பெரும்பாலும் கிளாமர் நடிகை என்றே இவர் முத்திரை குத்தப்பட்டார். அதனை தொடர்ந்து பாலியல் ரீதியான பிரச்சனையில் சிக்கி நீதிமன்றம் வரை சென்று கடைசி வரை போராடினார் புவனேஸ்வரி. அதன் பிறகு இவரை படங்களில் பார்க்கவே முடியவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு இப்போதுதான் மீடியாக்களில் தலைகாட்டி வருகிறார் புவனேஸ்வரி. அதுவும் ஒரு முழு ஆன்மீகவாதியாக இப்போது மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் அன்னதானம் கொடுக்க ஆரம்பித்த இவர் அதன் பிறகு அம்பாளின் அனுகிரகத்தால் இப்போது ஆன்மீகவாதியாக மாறிவிட்டேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நான் ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கவில்லை. ஆன்மீகமும் அம்பாளும் தான் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர்களுடைய அனுக்கிரகத்தால் தான் இப்போது ஒரு கோயிலை கட்டி இருக்கிறேன். இப்போது படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் நான் நடிக்க மாட்டேன். இதுதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. பெண்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் திருமணம் என்பதை யோசித்து முடிவெடுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

கணவரை பிரிந்த துயரம்:

ஏனெனில் இவர் காதலித்து திருமணம் செய்தவர். காதலிக்கும் போது இருந்த அன்பு திருமணத்திற்குப் பிறகு கிடைக்கவில்லை என்பதால் கணவருடன் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார் புவனேஸ்வரி. இவருக்கு ஒரே ஒரு மகன். சிறுவயதாக இருக்கும் போதே அவருடைய கணவர் புவனேஸ்வரியை பிரிந்து சென்று விட்டாராம் .ஒரு சிங்கிள் அம்மாவாக தன்னுடைய மகனை இவர்தான் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் .இப்போது இவருடைய மகன் அட்வகேட்டாக இருக்கிறாராம். இவருடைய குடும்பம் பெரிய குடும்பம். அப்போதிலிருந்து இப்போது வரை புவனேஸ்வரி மட்டும்தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதுகாத்து வருவதாக சொல்லி இருக்கிறார்.

வருமானம் என்பது இவருக்கு மூன்று வீடு இருக்கிறதாம் .அந்த மூன்று வீட்டையும் ஷூட்டிங்கிற்கு விட்டு விட்டாராம். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் செலவு செய்து கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார் .சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து மிகப்பெரிய பிரபலத்தை தேடினார் புவனேஸ்வரி. ஆனால் வில்லி கேரக்டரில் நடித்த பிறகு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இனிமேல் வில்லி கேரக்டர் நடிக்க கூடாது என்ற முடிவெடுத்தவர் .

bhuvaneshwari

bhuvaneshwari

வில்லி கேரக்டர்:

ஏனெனில் அவரைப் பார்த்து திட்டாதவர்களே இல்லை. அப்படி ஒரு கொடூரமான வில்லியாக சீரியல்களில் நடித்தார் .அதன் பிறகு ஒரு பெரிய நடிகர் இவரிடம் வந்து நம்பியாரை பற்றி கூறியிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய நல்ல மனிதர். ஆனால் அவர் நடித்தது எல்லாமே வில்லன் கேரக்டர் தான் .அதனால் ஒரு கேரக்டரை கேரக்டராக மட்டும் பார் என சொல்லி புரிய வைத்தாராம் .இப்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் புவனேஸ்வரி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top