Connect with us

Cinema News

ரெட்ரோவை ஓரங்கட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி!.. அட கஸ்தூரியும் இந்த பொள பொளக்குறாரே!..

நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் அவர் வானரன் படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டபோது சூர்யாவின் ரெட்ரோ படத்தை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கஸ்தூரி 1991ஆம் ஆண்டு ‘ஆத்தா உன் கோயிலிலே’ தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை, இந்தியன், அன்னமய்யா போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். பல ஆண்டுகளாக திரைத்துறையை விட்டு விலகியிருந்த கஸ்தூரி மலை மலை திரைப்படத்தில் துணை நடிகையாக மீண்டும் கம்பேக் கொடுத்து நடிக்கத் தொடங்கினார். மேலும், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் கஸ்தூரி சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்துக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, இட ஒதுக்கீடு மற்றும் திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக பேசியது போன்ற பல கருத்துகளை முன்வைத்து சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி ஜாமினெல்லாம் பெற்றும் தனது கருத்துக்களை கூறிக்கொண்டு தான் இருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வானரன் படத்தின் போஸ்டர் வெளியிட்டு விழாவில் பேசிய கஸ்தூரி, டூரிஸ்ட் ஃபேமிலி ரிலீஸ் ஆன அதே நாளில் தான் ஒரு பெரிய நடிகருடைய பெரிய பட்ஜெட் படம் ரிலீஸ் ஆகுது. ஆனால் அந்த பெரிய நடிகருடைய படம் பெருசா பேசப்படல டூரிஸ்ட் ஃபேமிலி எப்படியோ ஃப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திடுச்சு என பேசியுள்ளார். அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பற்றி மறைமுகமாக தாக்கி பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top