Connect with us

Cinema News

ஜனநாயகன் படத்தில் விஜயின் அம்மா இந்த பிரபல நடிகையா? இது புதுசா இருக்கே!

JanaNayagan: தமிழ் சினிமாவில் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தகவல்கள் கசிந்து இருக்கிறது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருடைய சம்பளம் ஒவ்வொரு படத்துக்கும் 50 கோடி வரை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அவர் தான் தற்போது டாப் நடிகராக இருந்து வருகிறார்.

இந்த நேரத்தில் விஜய் நடிப்பில் 70வது திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. அந்த நேரத்தில் புது அரசியல் கட்சியை அறிவித்தார். இனிமே தான் நடிப்பில் இருந்து விலக இருப்பதாகவும் தன்னுடைய நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் தயாராகி வருகிறது.

தெலுங்கில் திரிவிக்ரம் தொடங்கி கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் விஜயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் கமல்ஹாசன் மற்ற படங்களில் பிஸியாகி விட்டதால் அவர் படத்தினை இயக்க இருந்த ஹெச்.வினோத் உள்ளே வந்தார்.

இப்படம் அரசியல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நந்தமூரி பாலகிருஷ்ணா இயக்கத்தில் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப பகவந்த் கேசரியின் ரீமேக் உரிமையை கேவிஎன் புரோடக்‌ஷன் நிறுவனம் முறையாக வாங்கி இருக்கிறது. இருந்தும் இன்னமும் இப்படக்குழுவிடம் இருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவும் இருக்கிறார். அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பாபி தியோல், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயின் அம்மா கேரக்டரில் பிரபல நடிகை ரேவதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது புது காம்போ என்பதால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top