பூவே உனக்காக: காதலுக்காக எத்தகைய தியாகத்தையும் கொடுக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் இந்த படத்தை பற்றி பேசாமல் யாரும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காதல் வந்து வந்து போகும். அப்படிப்பட்ட காதலை விளக்கும் வகையில் அமைந்தது தான் பூவே உனக்காக. இதில் ஒரு தலை காதல் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
காதலுக்காக செய்த தியாகம்:
விஜய் தன்னுடைய மனதில் ஒரு பெண்ணை நினைத்து நினைத்து உருகி உருகி காதலிக்க கடைசியில் அந்த பெண் வேறொருவரை காதலிக்கிறாள் என தெரிந்ததும் தன்னுடைய காதலுக்காக அந்த பெண்ணையே விட்டுக் கொடுப்பார் விஜய். கடைசியில் கிளைமாக்ஸ் மூலம் அனைவரையும் கண்கலங்க வைத்து விடுவார் இந்த படத்தின் இயக்குனர். இந்த படத்தின் கிளைமாக்ஸில் விஜய்யும் சங்கீதாவும் சேர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பது ஒரு சிலரின் கருத்தாக இருந்தாலும் தன்னுடைய காதல்தான் பெரிது என சங்கீதாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டு அந்த ஊரை விட்டு சென்று விடுவார் விஜய்.
விஜய்க்கு டர்னிங் பாயிண்ட்:
இதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது. காலத்தால் அழிக்க முடியாத ஒரு காதல் காவியமாக மாறியது இந்த திரைப்படம். குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைத்து வயதினரையும் ரசிக்க வைத்த படமாக இது அமைந்தது. இன்று சினிமாவிலும் சாதித்து அரசியலிலும் சாதிக்க போகும் விஜய்க்கு இந்த படம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. குடும்பம் குடும்பமாக இந்த படத்தை கண்டு களித்து போயிருக்கின்றனர். அனைத்து வயதினரையும் ஈர்ப்பதற்காக கலகலப்பான அம்சங்களை இந்த படம் உள்ளடக்கி இருந்தது தான் இதன் சிறப்பம்சம்.
தீவிர ரசிகை நான்:
இந்த நிலையில் படத்தின் ஹீரோயினாக நடித்த சங்கீதா படத்தை பற்றியும் படத்தில் நடித்த விஜயைப் பற்றியும் ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு தான் விஜயின் தீவிர ரசிகையாக மாறினேன். அவர் நடித்த துப்பாக்கி திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஒரு வெறிகொண்ட ரசிகையாக மாறிவிட்டேன் என சங்கீதா குறிப்பிட்டு இருக்கிறார்.
samantha
இரண்டாம் பாகம்:
பூவே உனக்காக படத்தில் டி ஓ பி யாக வேலை பார்த்த சரவணன் என்பவரை தான் சங்கீதா திருமணம் செய்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் இவருடைய சித்தப்பா முறை என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் பூவே உனக்காக படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அந்தப் படத்தில் எந்த ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என சங்கீதாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பதில் அளித்து இருக்கிறார் சங்கீதா..
Kaur: கடந்த…
Vijay TVK:…
கரூரில் விஜய்…
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…