Connect with us

Cinema News

உருகி உருகி பாசத்த கொட்டும் அண்ணனாக விஜய்.. ஆனால் நேரில் சரியா பேசல.. நடிகை சொன்ன தகவல்

விஜய்: தற்போது சினிமாவிலிருந்து அரசியலுக்கு தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணித்திருக்கிறார் நடிகர் விஜய். தவெக என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கி கட்சி உருவாகி குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை தன் பக்கம் இணைத்து மிகப்பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலில் பெரும் பீதியை கிளப்பி விட்டார் விஜய். தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளும் இவருடைய அரசியல் பயணத்தை கண்டு கொஞ்சம் கலக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

விஜயின் குறிக்கோள்:

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்டும் என்பதே இவருடைய குறிக்கோளாக இருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னுடைய அடுத்தடுத்த நகர்வை மிகவும் கவனமுடன் எடுத்து வைத்து வருகிறார் விஜய். அதன் ஒரு பகுதியாக பத்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தி இரண்டாவது ஆண்டாக அதை தொடர்ந்து செய்து வருகிறார்.

முதல் அறிமுகம்:

இன்று மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் விஜய். இந்த நிலையில் விஜய் பற்றி பிரபல நடிகை சரண்யா அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சரண்யா.

விஜய் யாரென்றே தெரியாது:

தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலமானார். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார். வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். இந்த நிலையில் விஜய்யுடன் நடித்ததை பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் சரண்யா. காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது விஜய் பற்றி எனக்கு தெரியவே தெரியாது.

விஜய்க்கும் எனக்குமுள்ள தொடர்பு:

அவர் ஒரு பெரிய நடிகர் என்றும் எனக்கு தெரியாது. வேட்டைக்காரன் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் பொழுது தான் அவருடைய வளர்ச்சியை பற்றி நான் அறிந்து கொண்டேன். அவருக்கு தங்கையாக நடிப்பேன் என நான் நினைக்கவே இல்லை. படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் ஹாய் ,பாய் இதுதான் எனக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்பு. அவரும் அதிகமாக பேச மாட்டார்.

saranya

saranya

நானும் அப்படித்தான் இருப்பேன் என சரண்யா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் வேட்டைக்காரன் படத்தை பொருத்தவரைக்கும் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து அந்த படம் உருவாகி இருக்கும். பாசமலர் படத்தையே மிஞ்சும் அளவுக்கு தங்கை சரண்யா மீது அன்பு வைத்திருக்கும் அண்ணனாக விஜய் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் இவர் சொல்வதைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top