Connect with us

Cinema News

விஜயகாந்தோட ஆத்மா இவரா? நடிகை சொல்றதும் உண்மையா இருக்குமோ?

தமிழ்சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்தை மாதிரி தன்னிச்சையாக வந்து சாதித்தவர் விஜய் சேதுபதி. இவர் யாருடைய சாயலிலும் இல்லாமல் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு படிப்படியாக முன்னேறி வெற்றி நடைபோட்டு வருகிறார். தமிழில் மட்டுமின்றி பாலிவுட் படத்திலும் நடித்து முத்திரை பதித்தவர். ஹீரோ மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

விஜயகாந்தும், விஜய் சேதுபதியும்: நடிகை வடிவுக்கரசி ஏற்கனவே விஜயகாந்தும், விஜய் சேதுபதியும் ஒண்ணுதான் என்று பல முறை சொல்லி வருகிறார். ஆரம்பத்தில் அவர் அப்படி சொன்னபோது இருவரும் பல தடைகளைத் தாண்டி சினிமாவில் முன்னுக்கு வந்தனர் என்றார்.

விஜயகாந்தைப் போலவே பழகுவதில் எளிமையானவர். விஜய்சேதுபதி எனக்குப் பிள்ளை மாதிரின்னு சொல்லி இருந்தார் வடிவுக்கரசி. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்திடம் என்னென்ன குணங்கள் இருக்கிறதோ அதெல்லாம் விஜய்சேதுபதியிடமும் இருக்கிறது.

பிள்ளைன்னு சொல்றேன்: உதாரணமாக ஜனங்களை ஒண்ணு சேர்க்குறது, அவர்களிடம் பழகுற விதம், ஆர்டிஸ்ட்கள் அனைவரிடமும் சமமாகப் பழகுவது, மரியாதை கொடுப்பது என எல்லாமே விஜய்சேதுபதி கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால அவரை பிள்ளைன்னு சொல்றேன் என்றார் வடிவுக்கரசி. இப்போது ஒரு படி மேல போய் இப்படியும் சொல்லி இருக்கிறார்.

எனக்கு கடைசி காலத்தில் ஏதாவது ஆகிடுச்சுன்னா என் இறுதி சடங்கு என அனைத்தையும் விஜய் சேதுபதி தான் பண்ண வேண்டும் என அவரிடமே கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி ஏமா இப்படி சொல்றீங்க? என்று கேட்டார்.

விஜயகாந்துடைய ஆத்மா: தமிழ்சினிமாவுல விஜயகாந்த் அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு அப்புறம் விஜய் சேதுபதி தான் விஜயகாந்துடைய ஆத்மாவா இருக்காருன்னு நான் நம்புகிறேன். இப்ப கூட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு அந்த ஒட்டுமொத்தமாக குழுவுக்கும் சுமார் 2000 பேருக்கு மண்டபம் புக் பண்ணி அனைவருக்கும் சாப்பாடு போட்டார் விஜய் சேதுபதி என்கிறார் நடிகை வடிவுக்கரசி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top