Connect with us

Cinema News

இட்லி கடையில் தொடங்கிய பயணம் பராசக்தி வரை செல்ல எங்கே இருந்து பணம் வந்தது?.. ஜெயக்குமார் கேள்வி!..

உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு விலகினாலும் தொடர்ந்து அவர் பினாமி மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பல குற்றச்சாட்டுகள் அவ்வப்போது கிளம்பி வருகின்றன. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் உதயநிதியின் உறவினருடைய என்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரன் உதயநிதியின் பினாமி என்றும் சொல்கிறார்கள்.

இன்று திடீரென அமலாக்கத்துறையினர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆகாஷ் பாஸ்கரன் இதயம் முரளி படத்தை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். அந்த படம் ரிலீஸ் ஆகவே பல மாதங்கள் எடுத்து வரும் நிலையில், அதற்கு முன்னதாக தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் சிம்புவின் 49வது படம் என வரிசையாக எப்படி பல நூறு கோடிகளை கொட்டி படம் தயாரிக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது.

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷும் நயன்தாராவும் வந்து அவ்வளவு பஞ்சாயத்திலும் பங்கேற்கின்றனர். தனுஷ், சிம்பு கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொள்கின்றனர் என சினிமா உலகை தாண்டி ரசிகர்களே டவுட்டு பட்டு வந்த நிலையில், எல்லாமே உதயநிதியின் பினாமி என்பதால் தான் என குண்டை தூக்கிப் போடுகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

”வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் பல லட்சம் இளைஞர்களின் சாபம்!

இட்லி கடையில் தொடங்கிய பயணம் பராசக்தி வரை செல்ல எங்கே இருந்து பணம் வந்தது?

சினிமாவில் துணை இயக்குநராக கூட தகுதி இல்லாதவரை தயாரிப்பாளராக மாற்றி தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளை குடும்பத்தின் செயல் திட்டமா?

சிவப்பு சட்டையுடன்-சிரித்த முகத்துடன் நிதியமைச்சரை வரவேற்கும் காட்சி!

பட்ஜெட்டிற்கு பணம் போதவில்லை என்றால் ஆகாஷ் பாஸ்கரனிடம் வாங்கி கொள்வார் போல…” என பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இட்லி கடை மற்றும் பராசக்தி உள்ளிட்ட படங்கள் இந்த ரெய்டு காரணமாக திட்டமிட்டபடி சொன்ன தேதியில் வெளியாகுமா? அல்லது ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது விரைவில் தெரியவரும்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top