Connect with us

Cinema News

இந்தியன் 2 மட்டுமில்ல.. ரஜினியின் அந்த படத்துக்கும் உயிர்கொடுத்த தக் லைஃப்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம்தான் தக் லைஃப். கடந்த 5 ஆம் தேதி படம் ரிலீஸானது. படத்தில் திரிஷா, சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் நடித்திருக்கின்றனர்.படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ராஜ்கமல் நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். 37வருடங்கள் கழித்து கமலும் மணிரத்னமும் இணைந்து நடித்திருப்பதால் படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

அதுவும் முதன் முறையாக சிம்புவும் கமலும் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்திருப்பதால் சிம்பு ரசிகர்கள் ஒருபக்கம் கமல் ரசிகர்கள் ஒரு பக்கம் என படத்தை பற்றி பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி செய்து வந்தனர். ஆனால் படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தக் லைஃப் படத்திற்கு பிறகு ஏற்கனவே வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்த இந்தியன் 2 படமே பரவாயில்லை என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இதுவரை வெளியான பெரிய நடிகர்களின் படங்களில் கங்குவா மற்றும் இந்தியன் 2 படம்தான் பெரியளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற படமாக அமைந்தது. ஆனால் தக் லைஃப் படம் அதைவிட மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதனால் தக் லைஃப் படம் வெளி வந்து ஏற்கனவே வெளியாகி பல்பு வாங்கிய படங்கள் இப்போது ரசிகர்களால் பாராட்டை பெற்று வருகின்றன.

அந்த வகையில் ரஜினியின் லால் சலாம் படத்தையும் இப்போது கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் இந்தப் படம் வெளியான போது கழுவி ஊற்றாத ரசிகர்களே இல்லை. இப்போது லால் சலாம் படத்தை பற்றி பேசும் போது அதில் ஒரு காட்சியை குறிப்பிட்டு ‘இந்த சீன் மாதிரி ஒரு நல்ல சீன இந்தியன் 2, தக் லைப்ல காட்டுங்கடா கோமாளிகளா? சினிமாங்குறது வெறும் பணம் சம்பாதிக்கிற தொழிலோ கருப்பு பணத்த கணக்கு காட்ற இடமோ இல்ல.

laalsalaam

laalsalaam

அதுநாள சமூகத்துக்கு நாலு நல்ல கருத்த விதைக்கணும். அந்த விஷயத்துல லால் சலாம் பெரிய ஹிட் படம்தான்..’ என குறிப்பிட்டிருக்கின்றனர். தக் லைஃப் படம் ஹிட்டானதோ இல்லையோ மற்ற படங்கள் மீண்டும் ரசிகர்களிடம் டிரெண்டிங்காகி வருகின்றன.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top