Connect with us

Cinema News

நல்ல வேளை படத்துல இல்ல.. வீடியோ ரிலீஸான பிறகு ட்ரோலாகும் ‘முத்தமழை’ பாடல்

தக் லைப் திரைப்படத்தின் ஒரு பெரிய பிளஸ் அதில் அமைந்த முத்தமழை பாடல். ஆனால் அது படத்தில் இல்லை. படத்தில் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடி இருந்த அந்த பாடலை மேடையில் சின்மயி பாடினார். நீண்ட நாளுக்கு பிறகு சின்மயி குரலில் அந்த பாடலை கேட்டது அனைவருக்குமே ஒரு இதமான உணர்வை தந்தது. முத்தமழை பாடல் மையம் பிரிவு துயரம் என்பதனால் தீயின் குரலில் பாடலின் சோகத்தை உயிர்ப்புடன் வெளிக்காட்டியது.

ஆனால் சின்மயியின் மென்மையான குரலில் காதல் பொங்கியது. அதனால் சின்மயிக்கு சில பேர் சப்போர்ட் செய்தனர். தீயின் குரலுக்கும் சில பேர் சப்போர்ட் செய்தனர். இந்த நிலையில் நேற்று முத்தமழை பாடலின் வீடியோ வெளியானது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி குரலில் அந்த பாடலைக் கேட்டதும் படத்தில் அந்த பாடல் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

ஆனால் படத்தில் அந்த பாடல் இல்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. நேற்று அந்தப் பாடல் வீடியோ வெளியானதும் மிகப்பெரிய அளவு ட்ரோலுக்கு ஆளாகியது. அது சம்பந்தப்பட்ட மீம்ஸ்கள் தான் இதோ . தியேட்டர்ல படம் பார்த்துட்டு முத்தமழை பாட்டு இல்லைன்னு மக்கள் ஒரே அழுகை. அப்புறம் youtube ல வந்த பிறகுதான் இந்த பாட்டை youtube-யில் அப்லோட் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று சொல்லிட்டு தூங்க போனார்கள்.

muthamazhai

muthamazhai

தக் லைஃப் ரிலீசுக்கு பிறகு முத்தமழை பாட்டு ஏண்டா படத்தில் வைக்கல அப்படின்னு ஒரு கூட்டமும் முத்தமழை பாடல் வீடியோ ரிலீஸ் ஆன பிறகு நல்ல வேளை படத்துல வைக்கல என ஒரு கூட்டமும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இப்படி கொரியோகிராப் பண்றதுக்கு சின்மயி மேடையில் பாடியதையும் கோரஸ் பாடிய அந்த மூன்று பெண்களையும் இரண்டு பசங்களையும் வெவ்வேறு ஆங்கில்ல சூட் பண்ணி எடிட் பண்ணி இருந்தா கூட செம்மையாக வந்திருக்கும். இப்படி நெட்டிசன்கள் இந்தப் பாடல் வீடியோ வெளியான பிறகு ஏகப்பட்ட கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top