Connect with us

Cinema News

சூப்பர் ஸ்டார்களுக்கு நிகரான உயரம் கொண்டவர் சூரி!.. அடுத்த படத்துக்கும் ஐஸ் வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகர் சூரி நடிப்பில் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள மாமன் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு மும்முரமாக ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி சூரியை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான அக்‌ஷன் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி ஜெகமே தந்திரம், கார்கி, பொன்னியின் செல்வன் 1,2, கட்டா குஸ்தி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார்.

நடிகர் சூரி எழுதி நடித்துள்ள மாமன் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ராஜ் கிரண், சுவாசிகா, பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நகைச்சுமை மற்றும் சென்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகியுள்ள மாமன் படத்திற்கு ஏசாம் அப்துல் வகாப் இசைமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி இதுவரை விஷால், விஷ்ணு விஷால், ஜெயம் ரவி பொன்ற ஹீரொக்களுடன் நடித்துவிட்டு இப்போது நகைச்சுவை நடிகர் சூரியுடன் நடிப்பதற்கு பலரும் ஏன் என்ற கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், அதுபற்றி மேடையில் பேசினார். எல்லாரும் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறீங்களே நீங்க ஓகேவான்னு கேட்கிறாங்க, இப்படி ஒரு மனிதனுடன் நடிக்க நான் ரொம்ப பெருமை படுறேன், ஏன் என்றால் எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகர்களை எடுத்துக்கொண்டாலும் அவருக்கு நிகராக உள்ள நேர்மையான மனிதன் சூரி, அவரின் மரியாதையான பேச்சு, மக்களின் மீதுள்ள அன்பு இப்படி நல்ல பண்புகளை உடைய மனிதனுடன் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி என பேசியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top