Categories: Cinema News latest news

ஷாலினி கிடைச்சதே இவரால்தான்.. விடுவாரா? மீண்டும் அதே இயக்குனருடன் சேரும் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித்தின் அடுத்த படம் சம்பந்தமான அப்டேட்தான் அடுத்தடுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் யார் என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது. ஆனால் ஆதிக்தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போகிறார். இது ஓரளவு உறுதியாகிவிட்டது.

தயாரிப்பாளர்தான் இன்னும் செட்டாகவில்லை. பல பேர் இந்தப் படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரிக்க போகிறார் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஐசரி கணேஷ் நேற்று ஒரு அப்டேட்டை வெளியிட்டார். அதில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 படங்கள் தான் தயாரிக்கப் போவதாகவும் அதில் எந்தெந்த இயக்குனர்கள் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் அதில் ஆதிக் பெயர் இடம்பெறவில்லை.

அதனால் அஜித் படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் முன்வரவில்லை என்று இதிலிருந்தே தெரிகிறது. இந்த நிலையில் அஜித் ஆதிக் கூட்டணிக்கு பிறகு அஜித் இயக்குனர் சரணுடன் அடுத்த படத்தில் இணையப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் சரண் அமர்க்களம் படத்தின் 25 வருட நிறைவையொட்டி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அஜித்தை பற்றி புகழ்ந்து ஒரு பதிவை வெளியிட்டார்.

saran

அப்படியே விசாரிக்கும் போது அஜித்துக்காக சரண் ஒரு கதையை ரெடி செய்து வைத்திருக்கிறாராம். அந்த கதை அஜித்துக்கு பிடித்துப் போக கால்சீட் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம். அதுவும் கிராமத்து பின்னணியில் இந்த கதை உருவாக போகிறதாம். ஏற்கனவே அஜித்தை வைத்து ஏறுமுகம் என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால் அது அப்படியே டிராப் ஆகிவிட்டது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்