Categories: Cinema News latest news

அஜித்தை கலாய்த்த ரசிகர்கள்… விஷயமே புரியாமல் உள்ளே வந்து சிக்கிய பிரபல நடிகர்…

Ajithkumar: அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்க ரசிகர்கள் தங்கள் ஸ்டைலில் கலாய்த்து கொண்டு இருந்தனர். விஷயமே புரியாமல் உள்ளே வந்து நடிகர் சிக்கி இருக்கிறார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்திருக்கிறார். ஹாலிவுட்டில் ஹிட்டடித்த பிரேக் டவுன் படத்தின் ரீிமேக் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், திரிஷா மற்றும் அஜித் இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் அவர்களுக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்க அவர் மனைவியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து இருக்கிறார்.

பொங்கலுக்கு இப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென புத்தாண்டு விடுமுறையில் படம் சில விஷயங்களால் தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தற்போது எல்லா பிரச்னையும் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இடம்பெற்றுள்ளது. மேலும் அஜித் மூன்று கெட்டப்பில் நடித்து இருக்கிறார். அதிலும் பரமசிவன் படத்தில் இருப்பது போல நீண்ட முடியுடன் இருக்கும் காட்சிகளும் இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதில் நேற்று படக்குழு தரப்பில் இருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சில விஜய் ரசிகர்கள் வந்து பார்த்திபன் டிரஸ், பார்த்திபன் ஹேர்ஸ்டைல், பார்த்திபன் டிரஸ் என கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டது லியோ படத்தில் நடித்திருந்த விஜயின் கதாபாத்திரத்தைதான்.

ஆனால் பிரபல நடிகர் பார்த்திபன் உள்ளே வந்து, என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி. தரணி போற்றும் தனிப்பெரும் ஸ்டைலுக்குரியவர் ஏகே. கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட, தற்போது சில இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’ இயக்குனர் சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக!!! என பதிவிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் தெரிஞ்சு பேசுறாரா? நாங்கள் சொன்னது விஜயின் பார்த்திபன் கேரக்டரை சார். உங்களை இல்லை என அவருக்கு கலாய்ப்பதை மறந்து தற்போது விளக்கம் அளித்து கொண்டு இருக்கின்றனர். தெரியாமா செஞ்சாரா இல்லையானு அவருக்கே வெளிச்சம்.

Published by
ராம் சுதன்