Categories: Cinema News latest news

vidamuyarchi: சவடீகான்னா என்ன அர்த்தம் தெரியுமா? அப்பவே கொண்டு வந்த விஜய்…!

விடாமுயற்சி டீசரில் வந்த சவடீகா பாடல் இன்று இணையதளத்தையே அதிர வைத்து விட்டது. வழக்கம்போல ஸ்லோ ஸ்டெப்பைப் போட்டாலும் அஜீத் நம்மை ரசிக்க வைத்து விடுகிறார். இளம் அஜீத்தாக வரும் இவர் அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்கிறார்.

மங்காத்தா டீம் ரெண்டாவது இதுல இணைந்துள்ளது. அஜீத், திரிஷா, அர்ஜ+ன், வெங்கட்பிரபு என்று கலக்குகிறார்கள். முதலில் படம் இழு இழுன்னு இழுத்துக் கொண்டே இருந்தது. படம் எப்போ வரும்னு எல்லாரும் ஆவல் பொங்க காத்திருந்தாங்க. கடைசியில் அஜீத் தன்னோட வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். அதன்படி படமும் இப்போது பொங்கல் விருந்து என்பது உறுதியாகி விட்டது.

இன்று வெளியான சவடீகா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

தாய்லாந்து நாட்டு தாய்மொழியில ஹலோ என்று பொருள். இது ஒரு குதூகலமான பாடல். இது அஜீத், திரிஷா சாங்காக இருக்கலாம். அனிருத் மியூசிக்கில் மேஜிக் காட்டி இருக்கிறார். இவர் 2 கே கிட்ஸ்களின் நாடித்துடிப்பை உணர்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.

வில்லு படத்தில் விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சி. அதுல விஜய் ஒவ்வொரு கெட்டப்பில் வருவார். அப்போது டென்னிஸ் பிளேயரா ஆடுற மாதிரி ஒரு சீன் வரும். அதுல சவடீகான்னு கடைசில ஒரு வார்த்தை வரும். அதையே இந்தப் பாடலில் எடுத்து அமைத்துள்ளார்கள்.

இருங்க பாய்னு ஒரு வார்த்தையும் இதே பாடலில் டிரெண்ட் ஆகிக்கிட்டு வருது. அப்படின்னா அஜீத் என்ன சம்பவம் பண்ணப் போறாருன்னு எதிர்பார்க்க வச்சிட்டர்ங்க. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

விஜய் பாடல் தான் அஜீத் பாடலுக்கு முன்னோடி என்று ரசிகர்கள் வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர். எது எப்படியோ இருவரும் நல்ல நண்பர்கள் தானே. போட்டி மனப்பான்மை இதில் எதற்கு? விஜய் வேறு அரசியலுக்குப் போகப் போகிறார். அதனால் நல்ல நண்பர்களாக இரு தரப்பு ரசிகர்களும் இருக்கலாம். சமீபகாலமாகவே இருவருடைய படங்களிலும் ட்ரெண்டான டயலாக்குகள் மாறி மாறி வருவது தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v