Connect with us

Cinema News

சுகர் பேஷன்ட் மாதிரி ஒல்லியாக இளைத்துப் போன அஜீத்… பார்க்கவே பரிதாபம்! பிரபலம் பகீர் தகவல்

அஜீத்துக்கு கார், பைக் ரேஸ் என்றால் அலாதி ஆர்வம். சினிமாவில் இருந்தாலும் அதிலும் கலந்து கொள்வார். அந்த வகையில் நேற்று அவர் கார் ரேஸ்சுக்காகப் பயிற்சி செய்த போது விபத்துக்கு ஆளானார். ஆனால் காயமில்லை. இது பரபரப்பான செய்தியானது. அந்த வகையில் அவருக்கு கார் ரேஸ் தான் ஆர்வமா? சினிமாவான்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

அஜீத் கார் ரேஸ்ல கலந்து கொள்வதற்காக துபாயில் பயிற்சியில் ஈடுபட்டார். அந்தவகையில் சமீபத்தில் அவருடைய கார் கார்னர்ல மோதி பம்பரம் மாதிரி கிறுகிறுன்னு சுத்துனது. அப்புறம் அது நின்ன உடன் உள்ளே இருந்து சாதாரணமா கதவைத் திறந்து வெளியே வந்தாரு அஜீத். அவருக்கு எந்த விதமான பதற்றமும் இல்லை. அவருக்கு இது சர்வசாதாரணமாகவே தெரிந்தது.

இதெல்லாம் கார் ரேஸ்ல சகஜமப்பான்னு சொல்ற மாதிரி தான் தெரிந்தது. அவருடைய ரசிகர்களுக்குத் தான் ஏன் இந்த வேலையெல்லாம்… இவ்ளோ ரிஸ்க் எதுக்கு? சினிமாவில் நடித்துவிட்டுப் போக வேண்டியதுதானே என சங்கடப்பட்டார்கள். ஆனால் இந்த சூழலில் அஜீத்தைப் பிரமித்துப் பார்க்க வேண்டியிருக்கு.

ஏன்னா அத்தனை செய்தி சேனல்களும் நேற்று இந்த விபத்தைத்தான் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்;பின. இந்த அஜீத் கார் ரேஸ் என்பது ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து பலரையும் அஜீத் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் அஜீத்தோட புகைப்படம் ஒன்று வெளியானது. அதைப் பார்த்தால் சுகர் 500க்கும் மேல இருந்தா ஒருத்தருக்கு என்ன ஆகுமோ அப்படி இருந்தாரு. கண்களில் ஒரு பரிதாபம் இருந்தது. அப்படி வந்து எதற்காக இழக்கணும்? ஏன் ரேஸ்சுக்கு எல்லாம் போகிறார்னு கவலைப்படுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

கார் ரேஸ்சுக்காக தனது உடலை வருத்தி இளைத்துள்ளார். அப்போது தான் அந்தக் காரில் உட்கார முடியுமாம். அந்த வகையில் சினிமாவில் செலுத்துற அக்கறையை விட கார் ரேஸ்சுக்கு செலுத்தி இருக்கிறார் அஜீத்.

இது எந்தளவுக்குக் கொண்டு போய்விடும்னு தெரியல. ஒருவேளை சினிமாவையே விட்டு விட்டு ரேஸ்சுக்கே போயிடுவாரோன்னு தோணுது. விஜய் அரசியலுக்குப் போயிட்டாரு. அஜீத்தும் கார் ரேஸ்ல இவ்ளோ ஆசையா இருக்குறதால சினிமாவை விட்டு விலகுவாரோன்னு தோணுது.

இப்போ துபாய்க்கு ரேஸ்சுக்குப் போறாரு. இன்னும் ஆறு ஏழு மாசம் கழிச்சித்தான் வருவாரு. அவர் போற வேகத்தைப் பார்த்தா ஒருவேளை அவர் சினிமாவே வேணாம்னு கூட சொல்லலாம். அப்படிப்போனா அது திரையுலகிற்கு பேரிழப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top