Connect with us

Cinema News

ஜேசன் சஞ்சய், அஜித் சந்திப்புக்கு பின்னால் இருப்பது இந்த பிரபலமா? அப்போ நடக்குமோ!..

Ajithkumar: நடிகர் அஜித்குமாரினை ஜேசன் சஞ்சய் சந்தித்து கதை சொல்லி இருப்பதாக வெளியான தகவலை வதந்தி என தள்ளி விட முடியாது என பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் சினிமாவிற்கு படித்துவிட்டு நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து பிரபல நிறுவனமான லைக்காவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதற்கான அப்டேட்கள் கசிந்தாலும், சில வாரங்கள் முன்பு தான் சந்தீப் கிஷன் நடிக்க தமன் இசையமைக்க இருப்பதாக படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்களும் இணையத்தில் வெளியானது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்கள் முன்னர் இன்னொரு ஆச்சரிய தகவலும் வெளியானது.

இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் பிஸ்மி கூறுகையில், அஜித்துக்கு ஒரு படம் ஜேசன் சஞ்சய் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அது உண்மையா இல்லையா என தெரியாமல் வதந்தி என ஒதுக்கிவிட முடியாது. பொதுவாக இது உண்மையாக இருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது.

விஜயின் மனைவி சங்கீதாவின் நெருங்கிய உறவினர்தான் லைக்கா சுபாஸ்கரன் என்பதால் அவர் தன் தந்தை மூலமாக தான் மகனுக்கு முதல் பட வாய்ப்பை பெற்று கொடுத்தார். அதன் வேலைகளும் படு வேகமாக நடந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், சங்கீதாவும், அஜித்தின் மனைவி ஷாலினியும் நெருங்கிய தோழிகளாம். அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வதால் கண்டிப்பாக ஜேசன் சஞ்சய் அஜித்தை சந்தித்து கதை சொல்லி இருக்க அதிக வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால் அஜித் இதில் நடிக்க நிறைய சிக்கல் இருக்கிறது. என்னதான் சினிமாவில் போட்டி என்றாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்களாகதான் உள்ளனர். தற்போது விஜய் மற்றும் அவர் மகனுக்கு உறவு சரியாக இல்லை.

இந்த சமயத்தில் அவர் படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்காது எனவும் நம்பலாம். தன்னுடைய நண்பரின் மகன் கேரியரை வளர்க்க அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தாலும் விஜயின் சம்மதத்தை எதிர்பார்ப்பார் என்றே நம்பப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top