கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித்:
அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்து ஈரோப்பாவில் நடைபெறும் GT4 சீரிஸ் மூன்றாவது ரவுண்டில் பங்கேற்க இருக்கிறார். அதற்கான பயிற்சிகளை தற்போது எடுத்து வருகிறார். சமீபத்தில்தான் சென்னை வந்த அஜித் மனைவியுடன் தனக்கான நேரத்தை செலவிட்டார். ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டு உற்சாகமூட்டினார்.
அடுத்தடுத்து புகைப்படம்:
அதன்பிறகு பிரபலங்கள் ஒரு சில பேர் அஜித்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அதை இணையதளத்தில் வைரலாக்கி வந்தனர். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு நடிகர் சதீஷும் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அஜித்னாலே ஸ்பெஷல்தான்:
அஜித் என்றாலே அனைவருக்குமே ஸ்பெஷல்தான். அதற்கு காரணம் இதுவரை அஜித் தன்னை சுற்றி ஒரு வேலியை போட்டுக் கொண்டதுதான். யாரையும் பார்க்க மாட்டேன். ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மாட்டேன். பொது இடங்களுக்கோ விழாக்களுக்கோ வர மாட்டேன் என்றெல்லாம் தனி ரூல்ஸை போட்டு வைத்தார். ஆனால் சமீபகாலமாக அந்த ரூல்ஸை பிரேக் செய்து வருகிறார் அஜித்.
போட்ட ரூல்ஸை பிரேக் செய்த அஜித்:
சென்னையில் நடந்த ஐபிஎல் மேட்சையும் பார்க்க வந்தார் அஜித். அப்போது சிவகார்த்திகேயனும் அங்கு வர சிவகார்த்திகேயன் அஜித் இருவருமே ஒன்றாக அமர்ந்து மேட்சை பார்த்து ரசித்தனர். இப்படி வெளி உலகத்துக்கு தன் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி வருகிறார் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த படம் குட் பேட் அக்லி.
மொட்டைத்தல அஜித்:
அந்தப் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு இனிமேல்தான் வெளியாகும். அஜித் தனது கார் ரேஸை அக்டோபர் மாதத்தில் தான் நிறைவு செய்ய இருக்கிறார். அதன்பிறகு தனதுஅடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
ajith
இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் தனதுபுகைப்படமோ அல்லது வீடியோவோ வெளியாகிறது என்றால் அதில் வித்தியாசமான லுக்கில் இருப்பார். ஆனால் இப்போது வெளியான வீடியோ பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொட்டை தலையுடன் இருக்கிறார் அஜித். அது இப்போது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை காண கிளிக் செய்யவும்: https://www.instagram.com/reel/DLRhWcmC1bq/?igsh=MTBlMTM5NHZrZ3I5dQ==
SAC: சினிமாவிலும்…
Devara 2:…
Kaithi 2:…
வடிவேலு ஒரு…
TVK Vijay:…