அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறார். ஒரு ரசிகனாக படத்தை எந்த அளவு கொண்டாடுவார்களோ எந்த அளவு ரசிப்பார்களோ அப்படி ஒரு ரசிகனாக இருந்து அஜித்திற்காக இந்த படம் உருவாக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். முற்றிலும் ரசிகர்களுக்கான படமாக தான் இது இருக்கப்போகிறது.
விநியோகஸ்தர்கள் மத்தியிலும் இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் படத்தின் டீசர் வெளியானது தான். பில்லா ,தீனா, மங்காத்தா, வாலி என அஜித்தின் கெரியரில் எந்தெந்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதோ அத்தனை படங்களின் கேரக்டர்களையும் இந்த ஒரு படத்தில் கோர்வையாக காண்பித்து இருக்கிறார் ஆதிக்.
அதனால் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாட இருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தை பற்றிய ஒரு தகவலை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். முன்பு அஜித்தை பற்றிய ஒரு தொடரை வார இதழில் ஒரு நிருபர் எழுதிக் கொண்டிருந்தாராம். அதற்கு அஜித்தும் சம்மதித்திருக்கிறார். அதனால் அஜித் எங்கெல்லாம் படப்பிடிப்பிற்கு போவாரோ அவரை பார்ப்பதற்காகவே அந்த நிருபர் அலைந்து திரிந்து போய் பார்த்து விடுவாராம்.
இதை அறிந்த அஜித் எனக்காக இப்படி எல்லாம் அலைய வேண்டாம். உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அதை ஃபோனிலேயே நான் சொல்கிறேன். ஏதாவது சந்தேகம் இருந்தாலும் என்னிடம் தொலைபேசியில் நீங்கள் பேசிக் கொள்ளலாம் என ஒரு மொபைல் போனை வாங்கி கொடுத்தாராம். அதற்கு அந்த நிருபர் இது அலுவலகத்திற்கு தெரிந்தால் திட்டுவார்கள். வேண்டாம் என மறுத்திருக்கிறார்.
இருந்தாலும் அஜித் தொடர் எழுதும் வரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என வலுக்கட்டாயமாக கொடுத்திருக்கிறார். இது எப்படியோ அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு தெரிய வர அவரை எச்சரித்து திட்டினார்களாம். உடனே இந்த விஷயம் அஜித்திற்கு தெரிந்ததும் நேராக அந்த பத்திரிக்கையை அலுவலகத்திற்கு சென்று விட்டாராம் அஜித்.
நான் தான் வாங்கி கொடுத்தேன். எழுதும் வரை அவர் பயன்படுத்திக் கொள்ளட்டும். அதன் பிறகு நான் வாங்கிக் கொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என தன்னுடைய நியாயத்தையும் சொல்லிவிட்டு வந்து விட்டாராம் அஜித். அதன் பிறகு அந்த நிருபர் அந்த அலுவலகத்தில் இருந்து நின்று விட்டாராம். இப்போது ஒரு பெரிய எழுத்தாளராக அந்த நிருபர் இருக்கிறாராம். இப்படி தவறு எங்கெல்லாம் நடக்கிறதோ அதை கண்டிப்பாக தட்டிக் கேட்பார் அஜித் என செய்யாறு பாலு இந்த சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…