Connect with us

Cinema News

அஜித்தை விட ஷாலினி செம ஸ்டைலிஷா இருக்காங்களே.. couple goal இவங்கதான்

கடந்த 25 வருடங்களாக சிறந்த நட்சத்திர தம்பதிகளாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் படத்தில் இருந்து தொடங்கிய இவர்களது காதல் இன்று வரை குறையாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு கணவர் அஜித்தையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்து வருகிறார் ஷாலினி.

இன்று வரை இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அலைபாயுதே படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அதோடு இன்றைக்கும் இவருக்கு படங்களில் ஆஃபர் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் குடும்பம் தான் எல்லாமே என இருந்து வருகிறார் ஷாலினி. இன்னொரு பக்கம் அஜித் அவருடைய பேஷனான கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஷாலினியும் ஒரு பேட்மிட்டன் ப்ளேயர். அவருடைய மகன் ஆத்விக்கும் கால்பந்து வீரராக இருக்கிறார். கூடுதலாக அவருடைய தந்தை பேஷனான ரேஸிலும் அவ்வப்போது பயிற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார். மனைவி ஷாலினிக்காக தன்னுடைய வீட்டிலேயே பேட் மிட்டன் ஆடுகளத்தை அஜித் கட்டி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திருமணம் ஆனதில் இருந்து இன்று வரை ஷாலினிக்கு பிடிக்காததை அஜித் செய்ததே கிடையாது. எல்லாமே அவருக்காக என அஜித் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் அணி வெற்றிபெற்றவுடன் ஷாலினி ஓடி வந்து அஜித்தின் நெற்றியில் முத்தம் கொடுத்தது மிகவும் வைரலானது. அதில் இருவருக்குமான லவ் வெளிப்பட்டது.

shalini

shalini

இந்த நிலையில் வெளி நாட்டில் இருந்து தற்போது அஜித் சென்னை திரும்பியிருக்கும் நிலையில் சமீபத்தில்தான் தம்பதி சகிதமாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிலையில் அஜித் ஷாலினி ரீசண்டாக எடுத்த புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஷாலினி முன்பை விட படு ஸ்டைலாக இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top