Connect with us

Cinema News

தல-க்கு அந்த விஷயத்தில் ஓவர் ஆசையாம்… வெளிநாட்டில் வாங்காம வரவே மாட்டாராம்..

நடிகர் அஜித் தன்னுடைய சினிமா கேரியருக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தினை பயணம் செய்வதிலும் காட்டி வருகிறார் என்பது எல்லாரும் அறிந்த சேதி தான்.

நடிகர் அஜித்துக்கு சமையல், பைக் – கார் ரேஸ், போட்டோகிராஃபி மாதிரி இன்னொரு முக்கியமான பொழுதுபோக்கும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம் அஜித்தின் விடாமுயற்சி ஷூட் முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான அவரது லுக் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. `நீண்ட நாட்களுக்குப் பிறகு இளமையான, கறுப்பு முடியும் தலயைப் பார்த்துட்டோம்’ என அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது பிரியாணி செய்து படக்குழுவினருக்கு விருந்து படைப்பது அஜித்தின் பிடித்தமான செயல். மேலும், ஷூட்டிங்கில் இருந்து இடைவெளி கிடைக்கும் நேரங்களில் சூப்பர் பைக்கை எடுத்துக் கொண்டு உலக நாடுகளில் ட்ரிப் அடிப்பதும் அஜித்துக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும்.

அதேபோல், கார் ரேஸிலும் போட்டோகிராபியிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் தமிழ் திரையுலகமே அறிந்தது. ஆனால், இன்னொரு விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பெரும்பாலான ரசிகர்கள் அறியாத ஒரு விஷயம். அதுதான் மினியேச்சர் ஹெல்மெட் சேகரிப்பதில் அவருக்கு இருக்கும் பேரார்வம்.

நிஜ ஹெல்மெட்கள் போலவே அளவில் சிறியதாக சின்னஞ்சிறிய ஹெல்மெட்கள் மீது அஜித்துக்கு தீராத காதல் உண்டாம். இதற்காக பல வெளிநாடுகளில் இருந்து மினியேச்சர் ஹெல்மெட்களை வாங்கிக் குவித்திருக்கிறார் அஜித். சென்னையில் உள்ள தனது வீட்டில் இதற்கென தனி இடமே ஒதுக்கி அதில் அந்த ஹெல்மெட்களைப் பாதுகாத்து வருகிறார். இது அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் செய்தி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top