Ameerkhan: தற்போது அமீர்கான் சம்பந்தப்பட்ட நேர்காணல் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதுவும் லோகேஷ் உடன் தான் அடுத்த படத்தில் இணைய போவதாக அவர் கொடுத்த ஒரு அறிவிப்பு சோசியல் மீடியாக்களில் பெருமளவு பரவி வருகிறது. ஏற்கனவே இது பற்றிய செய்தி வெளியானாலும் அது வதந்தி என்று நம்பப்பட்டது. ஆனால் இப்போது அமீர்கான் இப்படி ஒரு தகவலை சொன்ன பிறகு எந்த மாதிரியான கதையாக இருக்கும்?
கூலி திரைப்படம்:
தமிழில் அமீர்கான் நடிக்கப் போகிறாரா அல்லது லோகேஷ் அவரை வைத்து ஹிந்தியில் படம் பண்ணப் போகிறாரா என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதிலும் அமீர்கான் நடித்திருக்கிறார்.
பேன் இந்தியா படம்:
கூடவே சத்யராஜ் நாகர்ஜூனா சவுபின் ஷாகிர் சுருதிஹாசன் உபேந்திரா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கின்றது.
coolie
கதையே கேட்கவில்லை:
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் அமீர் கான் நேர்காணல் ஒன்றில் கூலி திரைப்படத்தில் நடித்ததை பற்றியும் அடுத்து லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண போவதை பற்றியும் சொல்லி இருக்கிறார். அவரிடம் கூலி திரைப்படத்தில் நடித்ததை பற்றி ஏதாவது ஒரு தகவலை சொல்லுங்கள் என ரசிகர் கேட்க இந்த படத்தில் நான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறேன். லோகேஷ் என்னிடம் வந்து ரஜினி சார் படத்தில் ஒரு ரோல் இருக்கிறது என்று சொன்னதும் கதையே நான் கேட்கவில்லை.
உடனே ஒப்புக்கொண்டேன். அந்த அளவுக்கு ரஜினி சார் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் உடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன். இந்தப் படம் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. லோகேஷ் உடன் அந்த படத்தில் இணைவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என அமீர்கான் கூறியிருக்கிறார்.
Kaur: கடந்த…
Vijay TVK:…
கரூரில் விஜய்…
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…