Connect with us

Cinema News

60 வயசுல 3வது காதலியை தட்டி தூக்கிய அமீர்கான்!… அட இவங்க தமிழ் பொண்ணா!..

Amir Khan: பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் அமீர்கான். அதாவது சல்மான்கான், ஷாருக்கான் வரிசையில் சல்மான் கானும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு இப்போது 60 வயது ஆகிறது. நேற்று தனது வீட்டில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

Gauri Spratt: இந்த விழாவில் ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில்தான் அமீர்கான் தனது புதிய காதலி கௌரி ஸ்பராட் என செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அமீர்கான் இதற்கு முன் 2 முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்தவர்.

1986ம் வருடம் ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2002ம் வருடம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன்பின் லகான் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த கிரண் ராவ் என்பவருடன் அமீர்கானுக்கு காதல் ஏற்பட்டது.

2005ம் வருடம் கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார். அனால், 2021ம் வருடம் இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக இருப்போம் என இருவருமே அறிவித்தனர். இந்நிலையில், தற்போது 3வது காதலி கௌரி ஸ்பராட்டை அறிவித்திருக்கிறார்.

கௌரி ஸ்பராட்டும் அமீர்கானும் 25 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில்தான் அமீர்கானின் புதிய கேர்ள் பிரண்டாக மாறியிருக்கிறார். கௌரி ஸ்பராட்டின் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர். கௌரி சின்ன வயது முதல் பெங்களூரில் வளர்ந்தவர். அதன்பின் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். திருமணமாகி கணவரை பிரிந்த இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பல வருடங்களாக கௌரி வேலை செய்து வந்தார்.

முதல் மற்றும் இரண்டாம் மனைவிகள் மூலம் அமீர்கானுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. மகன் ஜுனாய்த் கான் தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். லவ்டுடே ஹிந்தி ரீமேக்கிலும் இவர் நடித்திருந்தார். மகனுக்கே திருமணம் ஆகாத நிலையில் 60 வயதில் 3வது காதலியை அமீர்கான் தேர்ந்தெடுத்திருப்பதை பாலிவுட் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top