Connect with us

Cinema News

ஜனநாயகனுடன் பராசக்தி ரிலீஸாக வாய்ப்பே இல்லை!.. டான் பிக்சர்ஸ் இனி டவுன் பிக்சர்ஸ் தான் – அந்தணன்!..

அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், அவர்கள் அளித்த சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல் தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது தான் இப்போதைக்கு பெரிய பிரச்னை என பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இதயம் முரளி, பராசக்தி, சிம்புவின் 49வது படம் மற்றும் தனுஷின் இட்லி கடை என பல படங்கள் வரிசையாக உருவாகி வருகின்றன. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக நடந்த ரெய்டில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

ஆனால், அவர் சிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்று விட்ட நிலையில், அவர் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியும் அவர் அதை கடைபிடிக்கமால் இருப்பது அவர் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களையும் சேர்த்து முடக்கி விடுவோம் என்கிற எச்சரிககியை டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ED விடுத்துள்ளது.

இதன் காரணமாக சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பது தெரிகிறது. பராசக்தி திரைப்படம் கண்டிப்பாக விஜய்யின் ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக பொங்கலுக்கு வராது என்றும் வந்தாலும் அந்த பட்த்துக்கு எதிராக பல பிரச்னைகள் கிளம்பியுள்ள நிலையில், சர்ச்சைகள் வெடிக்கும் என அந்தணன் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top