Connect with us

Cinema News

சின்மயி பாடிய முத்தமழைப் பாடலால் ஏஆர்.ரகுமானுக்குத் தான் அவமானம்… பொளந்து கட்டும் பிரபலம்

ஒரு பாடல் என்றால் இனம்புரியாமல் மக்கள் மத்தியில் போய்ச் சேரணும். அவங்க கொண்டாடணும். சிலருக்கு ஒரு பாடல் ஏன் பிடிக்குன்னே தெரியாது. ஆனால் காலாகாலமாகக் கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி தான் தக் லைஃப் படத்தில் வரும் முத்தமழை பாடல். யூடியூப்ல சண்டை போடுறதுக்குத் தான் இந்தப் பாடல். தீ பாடுனது சிறப்பா?

சின்மயி பாடுனது சிறப்பா என்ற பஞ்சாயத்து தான். தீயை ஏன் படவிழாவில் பாட வைக்கலன்னு கேட்குறாங்க. ஒரு சிலர் பஞ்சாயத்துல தான் மேல குற்றச்சாட்டு வந்தால் அதை வேற விதமா திருப்பி விடுவாங்க. இதனால என்ன வருதுன்னா படம் ஓடாது. அப்படின்னா என்ன பண்றதுன்னா புதுசா பல விஷயங்களைக் கிளப்பி விடுவோம்னு சின்மயியக் கொண்டு வந்து ஏஆர்.ரகுமான் பாட வைப்பாரு. சின்மயியை பாட விடாமல் தடுத்தது யாருன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

இப்போ அவருக்கு விஜய் ஆண்டனி, ஜேம்ஸ் வசந்தன் நான் பாட்டைக் கொடுக்கப் போறேன்னு சொல்றாங்க. டி.இமான் நான் ஏற்கனவே பாட்டைக் கொடுத்துட்டேன்னு சொல்றாரு.

இப்ப எனக்குப் பாட்டுக் கொடுக்கலன்னு சொல்றது ட்ரெண்ட் ஆகுது. இது எந்த வகையில நியாயம்னு திட்டமிட்டுக் கிளப்பி விடுறாங்க. முத்தமழை பாடலில் ஆதாயம் பெற்ற ஒரே நபர் சின்மயிதான். ஏஆர்.ரகுமான் ஏன் இந்த வேலையைப் பார்த்தாரு? அவர் சமாதானம் செய்யப்பட்டாரா? இல்லை சமரசம் செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பாடலில் வரிகள் சிறப்பாக இல்லை. என்னாளா, உன்னாலா ஆகிய வரிகள் திணிக்கப்பட்டவை. சின்மயி பல இடங்களில் ராகத்தையே மாத்திப் பாடியிருப்பாங்க. கமலோ, மணிரத்னமோ தான் சமரசம் பண்ணி இருப்பார்கள். அதனால் தான் ஏஆர்.ரகுமானும் சம்மதித்து இருக்கிறார்.

ஒரே பாடலை 2 வெர்சனா மாத்திப்பாடுவது தப்பில்ல. ஆனா ஒரே பாடலை ஏற்ற இறக்கத்தோடு பாடுனது இசை அமைப்பாளரை அவமதித்ததாகத் தான் நான் பார்க்கிறேன். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top