Cinema News
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள.. டைட்டில் லுக் வெளியானதும் சூர்யாவுக்கு வந்த பிரச்சினை
சூர்யா 45:
சூர்யாவின் சமீபகால படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து வரும் வேளையில் இன்று அவருடைய 45 ஆவது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடித்திருக்கிறார். படத்திற்கு கருப்பு என பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வேட்டை கருப்பு என பரவலாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பட குழு இதனுடைய தலைப்பை வெளியிட்டு இருக்கின்றனர். வழக்கம் போல சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தை எப்படியாவது சாகடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஈடுபட்டு வருவதைப் போல இன்று அவருடைய இந்த டைட்டில் போஸ்டர் வெளியானதும் மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்து இருக்கின்றனர்.
சமூகத்திற்கு செய்த உதவி:
சூர்யாவை பொருத்தவரைக்கும் அவரை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகராக ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யா மாணவர்களுக்கு கல்வி வழங்குவதிலும் விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார். அவரால் இன்று ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
கங்குவாவின் தோல்வி எதிரொலி:
விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதுமே குரல் கொடுப்பவர் சூர்யா. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. அதனால்தான் அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார். இந்த நிலையில் தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா ஒரு சமயம் காட்டமாக விமர்சித்து இருந்தார். அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது .இதன் எதிரொலியாகத்தான் கங்குவா படம் பெரிய சரிவை சந்தித்தது என சில பேர் கூறி வந்தனர்.
தனிப்பட்ட தாக்குதல்:
கங்குவா தூக்கு போட்டு தொங்கவா என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தனர். அது மட்டுமல்ல சூர்யா மீதும் சூர்யா குடும்பத்தின் மீதும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒட்டுமொத்த வன்மத்தையும் கக்கி இருக்கிறார்கள் என கங்குவா திரைப்படம் வெளியானதும் இப்படி ஒரு கருத்து பரவத் தொடங்கியது. அதுமட்டுமல்ல கங்குவா திரைப்படத்தை பொருத்தவரைக்கும் பெரிய படங்களை எப்பொழுதுமே வாங்கி ரிலீஸ் செய்கின்ற ரெட்ஜெயண்ட் கங்குவா திரைப்படத்தை வாங்கவில்லை. அதனால் அவர்களும் பிஜேபியும் தற்போதைய ஆளுங்கட்சியும் இணைந்து சோசியல் மீடியாக்களில் இந்த படத்தை பற்றியும் சூர்யாவை பற்றியும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தி பல தகவல்களை வெளியிட்டு வந்ததாக அப்போது சாட்டை முருகன் பேசியிருந்தார்.

surya
கருப்பு:
இப்படி சூர்யாவின் ஒவ்வொரு படங்கள் ரிலீஸ் ஆகும்போது கூடவே அதற்கு பின்னணியில் அரசியலும் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரெட்ரோ திரைப்படம் வெளியாகி அந்தப் படமும் கலவையான விமர்சனத்தை சந்திக்கும் போதும் இப்படித்தான் கருத்துக்கள் உலா வந்தன. இந்த நிலையில்தான் சூர்யாவின் 45 வது படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரை பார்க்கும்பொழுது கருப்பு சிவப்பு நிறத்தில் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டும் ரசிகர்கள் இதிலும் அரசியல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்னவெனில் சிங்கம் மாதிரியான படம் தான் வேண்டும் என கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர்.