புஷ்பா 2 படத்துக்குப் பிறகு பிரபாஸை விட அல்லு அர்ஜுன் ரேஞ்சே எங்கேயோ போய் விட்டது. பாலிவுட் நடிகர்கள் தான் ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபீஸை கட்டி ஆண்டு வந்தனர். அதன் பின்னர், கோலிவுட் நடிகர்கள் சூப்பர் ஸ்டார், தளபதி என தூள் கிளப்பினர். ஆனால், சமீப காலமாக 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வேண்டுமென்றால் அது ஆந்திரா நடிகர்கள் பக்கம் தான் இருக்கு என்கிற நிலைமை மாறிவிட்டது.
இந்தி நடிகர்களே இம்மியளவு தூக்கம் இல்லாமல், எப்படி வெற்றிப் படங்களை கொடுப்பது என கண் பிதுங்கி பார்த்து வரும் நிலையில், தொடர்ந்து பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் என அனைவரும் அடித்து நொறுக்குகின்றனர்.
புஷ்பா 2 படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தீபிகா படுகோன் லீடு ரோலில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் பசில் ஜோசப் இயக்கத்தில் நடிப்பார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில், சக்திமான் படத்தை தான் பசில் ஜோசப் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப் போகிறார் என்றனர்.
ஆனால், சமீபத்தில், இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சக்திமான் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து தான் இயக்கப் போகிறேன் என்றும் அவரை தவிர மற்றவர்களுக்கு அது செட்டாகாது என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார்.
அல்லு அர்ஜுனை வைத்து பசில் ஜோசப் இயக்கப் போகும் படம் முற்றிலும் மாறபட்ட படமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். மின்னல் முரளி படத்தை இயக்கியதில் இருந்தே பசில் ஜோசப்பிடம் சூப்பர் ஹீரோ படங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…