Categories: Cinema News latest news

நள்ளிரவில் நடிகைகளுடன் குத்தாட்டம்… தனுஷ் குறித்து பயில்வான் சொன்ன தகவல்!

தனுஷ் தயாரித்து இயக்கும் படம் இட்லி கடை. வரும் அக்டோபர் 1ல் வெளியாகிறது. டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறத. ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். தனுஷ் உடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அரண்விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தார். அமலாக்கத்துறை வளையத்தில் இருந்தார். அந்தப் பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் குறித்து தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இந்திப்பட விழாவில் இரவு விருந்தில் கலந்து கொண்ட தனுஷ் நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டார். தனுஷ், கீர்த்தி சனம் நடிக்கும் தேரே இஸ்க் மெய்ன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. படக்குழு சார்பில் நேற்று முன் தினம் மும்பையில் மிட்நைட் பார்ட்டி நள்ளிரவு போதை விருந்து நடைபெற்றது.

இதில் நடிகை தமன்னா, மிர்னாள் தாக்கூர், கீர்த்தி சனம், பூமி பட்நாகர், தயாரிப்பாளர் கன்கா, டிவான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிகைகளுடன் கட்டிப்பிடித்து நடனம் ஆடினார். இந்த வீடியோ வலைதளங்களில் பரபரப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த இந்திப்படம் வரும் நவம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. தனுஷ் ஏற்கனவே 2013ல் ராஞ்சனா என்ற பாலிவுட் படத்தில் கால்தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஆரம்பத்தில் நடிக்கவே தெரியாத நடிகராக ஒல்லிப்பிச்சானாக வந்ததாக அப்போது கமெண்ட் செய்தனர். ஆனால் இன்று நடிகர் மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக அவதாரம் எடுத்துள்ளார். இது அவரது கடின உழைப்பையும், விஸ்வரூப வெற்றியையுமே குறிக்கிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v