1985 ஆம் ஆண்டு வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் சின்ன வீடு. இந்திய சினிமாவிலேயே ஒரு சிறந்த திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஹீரோவாக பாக்யராஜ் தான் நடித்திருந்தார். தன்னுடைய கச்சிதமான திரைக்கதையால் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இந்த படத்தின் கதை அமைப்பை அழகாக கொண்டு போயிருந்தார் பாக்யராஜ்.
பெரும்பாலும் பாக்கியராஜ் திரைப்படங்களில் கதையோடு நகைச்சுவை காட்சிகளும் நிறையவே அமைந்திருக்கும். அதன்படி இந்த சின்ன வீடு திரைப்படத்தில் பல நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தை பார்ப்பதற்கு ஆண்களை விட பெண் ரசிகைகள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்தார்கள்.
இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் இதே மாதிரியான கதை அமைப்பைக் கொண்ட கோபுரங்கள் சாய்வதில்லை படமும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதனால் இந்த சின்ன வீடு திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை கொஞ்ச காலம் தள்ளி வைத்து அதன் பிறகு வெளியிட்டனர்.
அதற்கு ஏற்ற பலனையும் இந்தப் படம் பெற்றது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிரபல கதை ஆசிரியரான ஜி வி குமார் ஒரு சுவாரசிய சம்பவத்தை கூறினார். எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இருக்கும் போது அவரை பார்ப்பதற்காக பாக்கியராஜ் ஜிவி குமாருடன் சென்றிருந்தாராம்.
அப்போது காரில் செல்லும் போது காரை ஓட்டி வந்தவர் ஒரு அமெரிக்கர். பாக்யராஜ் ஜிவி குமாரிடம் சின்ன வீடு கதையை அந்த டிரைவரிடம் சொல் எனக் கூறினாராம். உடனே ஜீவி குமாரும் ஆங்கிலத்தில் சின்ன வீடு கதையை சொல்ல உடனே காரை நிப்பாட்டினாராம் அந்த ஓட்டுனர்.
ஜி வி குமார் ஏன் காரை நிறுத்தினாய் என கேட்டதற்கு அந்த அமெரிக்க டிரைவர் கண்கலங்கி ‘இது அப்படியே என்னுடைய கதை மாதிரியே இருக்கிறது’ என சொல்லி அழுதாராம். அது மட்டும் அல்லாமல் இப்படியும் இந்தியாவில் கதை எடுக்க முடியுமா? இந்த மாதிரி ஒரு கதை ஆங்கில படங்களில் வெளிவருவது இல்லையே. நல்ல கதையாக இருக்கிறது என மனதார பாராட்டினாராம் அந்த அமெரிக்கர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…