Categories: Cinema News latest news

ஊருக்கு உபதேசம்!.. ஆனா வாயில சிகரெட்டு!.. சூர்யாவை வச்சு செய்யும் பிரபலம்!…

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களின் வெற்றி சூர்யாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரின் தம்பி கார்த்தியும் சினிமாவில் தொடந்து நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக பிரச்சனைகளிலும் அக்கறை கொண்டவர் சூர்யா. அகரம் எனும் நிறுவனத்தை துவங்கி வாய்ப்பு வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்.

இவரின் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி வாய்ப்பை பெற்று பலரும் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஒருபக்கம், சமூக பிரச்சனைகளுக்கும் சூர்யா குரல் கொடுத்து வருகிறார். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தார்.

இது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிக்க வேண்டும் என சொல்லி டிவிட்டரில் கோரிக்கை வைத்தார். அதேபோல், நீட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொன்னவர் இவர். அதேபோல், சமீபத்தில் விஷச்சாராயம் அருந்தி பலர் இறந்துபோனதற்கும் அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு வெளியானது. அதில், வாயில் சிகரெட்டை வைத்துகொண்டு சூர்யா ஸ்டைலாக நடந்து வருவது போல காட்சிகள் இடம்பெற்றது.

இந்த போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ‘கள்ளக்குறிச்சி மரணங்களை அரசின் அலட்சியம் என பொங்கிய சூர்யா வாயில் சிகரெட்டுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என அரசியல் கட்சியினார் சொன்னதால் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை ரஜினி நிறுத்தினார். இது யாருடைய அலட்சியம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், போதை பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராய அழிப்பு என ஒருபக்கம் இளைஞர்களுக்கு உபதேசம். மறுபக்கம் அதுபோன்ற பழக்கங்களை ஊக்குவித்து இளைய சமூகத்தை நாசம் செய்ய முயற்சி செய்வது… அடுத்த போஸ்டரில் சாராய பாட்டிலுடன் நிற்பார் போல!.. என நக்கல் அடித்திருக்கிறார் மாறன்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்