Connect with us

Cinema News

உஷாரய்யா உஷாரு!.. ஓரஞ்சாரம் உஷாரு!.. விஜய்க்கு எச்சரிக்கை கொடுத்த ப்ளூ சட்டை..!

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தான் இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகின்றது. இப்படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கின்றார்.

தமிழக வெற்றிக்கழகம்:

நடிகர் விஜய் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சியின் மூலமாக வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். தற்போது முழு நேரமும் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகின்றார் நடிகர் விஜய்.

சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டை நடத்தி முடித்திருந்தார். அப்போது ஒரு முழு அரசியல் தலைவரான விஜயை நம்மால் பார்க்க முடிந்தது. கட்சியின் கொள்கை, கோட்பாடு என அனைத்தையும் அறிமுகம் செய்த விஜய் ஆளும் திமுக கட்சியை காட்ட மகள் விமர்சித்து பேசி இருந்தார். இதனால் திமுக கட்சியினர் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா:

நந்தம்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் மீண்டும் திமுக கட்சியை எதிர்த்து பேசி இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவிடாமல் செய்ததே அவர்கள் தான் என்கின்ற பாணியில் பேசியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களாட்சியை ஒழிக்க வேண்டும் பேசியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழலில் திமுகவுக்கு எதிராக பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் தொல் திருமாவளவன் தனது கட்சியிலிருந்து தற்காலிகமாக ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்து அறிவித்திருக்கின்றார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இந்நிலையில் இன்று ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ‘சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர் கோபப்பட்டு விரைவில் ராஜினாமா செய்வார். அதன் பிறகு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவார். ஜோலியை முடித்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு ரிட்டன் ஆவார். விஜய் அவர்களே உஷாரய்யா உஷாரு.. ஓரஞ்சாரம் உஷாரு’ என்று எச்சரிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

Continue Reading

More in Cinema News

To Top