Connect with us

Cinema News

கேங்ஸ்டர் படங்கள் எடுக்க தேவையான பொருட்கள்.. மளிகை சாமானை விட லிஸ்ட் பெருசா போகுதே மாறா

ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் படத்தை பார்க்க செல்கிறார்களோ இல்லையோ அந்த படத்தை பற்றி ரிவியூவ் கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன் எப்போது வீடியோவில் வருவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் அதைப்பற்றி தன்னுடைய நகைச்சுவையான பாணியில் படத்தை பற்றி விமர்சிப்பது அவருடைய வழக்கம்.

அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். பெரிய நடிகர் சின்ன நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் எல்லா நடிகர்களின் படங்களையும் தன்னுடைய நகைச்சுவை மற்றும் கிண்டலான கோர்வையில் படத்தை பொளந்து கட்டுவார் ப்ளூ சட்டை மாறன். சினிமா மட்டுமல்ல அரசியலில் நடக்கும் நிகழ்வுகளையும் விவரித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுவதும் அவருடைய வழக்கம்.

இந்த நிலையில் கேங்ஸ்டர் படங்கள் எடுப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் கொரிய படங்களின் ஹார்ட் டிஸ்க் ஒன்று, கண்டெய்னர் லாரி 5, மொக்கையான பழைய ஃபேக்டரி செட் ஒன்று,, தீபாவளி துப்பாக்கி 50, அட்டகத்தி முப்பது,

தக்காளி சட்னி 20 லிட்டர், சரக்கு பாட்டில் 20 ,சிகரெட் பாக்கெட் 20, மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ ஒன்று, டேபிளில் மூக்கை செய்து வில்லன் மோந்து பார்க்க மைதா மாவு 20 கிராம், செஞ்சுரு போட்டு தள்ளிரு ஹார்பர்ல இன்னைக்கு நைட் 100 கிலோ சரக்கு வருது போன்ற வசனங்கள் 15 பக்கம், காப்பி ரைட் வாங்காத இளையராஜா பாடல்கள் மூன்று, கிரீன் மேட் ஸ்டூடியோ இரண்டு,

bluesattaiamaran

bluesattaiamaran

வெட்டியாய் இருக்கும் பக்கத்து மாநில நடிகர்கள் நான்கு என இது இருந்தால் போதும் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுத்து விடலாம் என தன்னுடைய பதிவில் பதிவிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அவர் சொல்வதைப் போல இப்போது வருகிற பெரிய நடிகர்களின் படங்களில் இவர் சொன்ன இந்த விஷயங்கள் இல்லாமல் இருக்காது. கதை இருக்கிறதோ இல்லையோ இவர் சொன்ன இந்த விஷயங்கள் இருந்தால் போதும் அது ஒரு கேங்ஸ்டர் படம் என நம்மளையும் நம்ப வைத்து விடுகிறார்கள் சம்பந்தப்பட்ட பட குழு.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top