Connect with us

Cinema News

WFH பண்றவருக்கு Y பாதுகாப்பு வேறயா?.. அண்ணன் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிய புளூ சட்டை..!

Actor Vijay: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி வருகின்றார். கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார்,

மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமீதா பைஜூ, கௌதம் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் விஜய் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகின்றது.

அரசியல் பயணம்: நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருந்தார். பின்னர் கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையுமே மிகச் சிறப்பாக நடத்தி முடித்து இருந்தார். அதிலும் இவர் நடத்திய மாநாட்டுக்குப் பிறகு இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த மாநாட்டில் ஆளும் கட்சியான திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். மேலும் நம்முடைய முதல் எதிரி திமுக தான் என்று அவர் பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அரசியல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றார்.

நடிகர் விஜய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. வீட்டிலிருந்து கொண்டே அரசியல் செய்து வருகின்றார். பனையூர் பண்ணையார் உள்ளிட்ட ஏகப்பட்ட விமர்சனங்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது பட வேலைகள் மற்றும் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் நடிகர் விஜய்.

விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு: நம் நாட்டில் மொத்தம் ஆறு வகையான பாதுகாப்பு பிரிவுகள் இருக்கின்றது. அதாவது X, Y, Y+, Z, Z+ , SPG என்று வகைப்படுத்தப்படுகின்றது. இந்த பாதுகாப்புகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது. ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பின்னர் பாதுகாப்பு வழங்கும்.

அந்த வகையில் நடிகர் விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இது சற்று குறைவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஒரு பிரிவு. இந்த பிரிவில் 9 மில்லி மீட்டர் பிஸ்டலுடன் ஒருவரும், ஸ்டெய்ன் துப்பாக்கியுடன் ஒருவரும் பாதுகாப்பில் அவருடன் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு குழுவில் மொத்தம் 11 பேர் இருப்பார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இரவு நேரங்களிலும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படும்.

புளு சட்டை மாறன் விமர்சனம்: நடிகர் விஜய்க்கு Y பிரிவில் பாதுகாப்பு வழங்கப்பட்டது தொடர்பாக புளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து எப்படி யோசித்து இருப்பார் என்பது தொடர்பாக பதிவிட்டிருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஏன்டா நான் ஒருநாள் கூட வீட்ல தஙகாம ஊர் ஊரா போய் உங்க எதிரி பெரியாரை திட்டி, தொண்டை கிழிய கத்தறேன். எல்லா பக்கமும் எதிரிகளை சம்பாதிச்சி வச்சிருக்கேன். 200 கேஸ் இருக்கு, எனக்கு பாதுகாப்பு தர மாட்டீங்க?

ஆனா, அவன் பனையூர் பங்களாவுல 10 செக்யூரிட்டி, ஷூட்டிங் ஸ்பாட்ல 20 பவன்சர் வச்சிருக்கான். வேற எங்கயும் போகாம WFH பண்றான். இது போதாதுன்னு‌ அவனுக்கு நீங்க சிறப்பு பாதுகாப்பு வேற தர்றீங்களா? இருங்கடா நான் யாருன்னு காட்டறேன். பெரியாரை பாராட்டி கழுவி ஊத்துனாதான் சரிப்பட்டு வருவீங்க” என்று பதிவிட்டிருக்கின்றார்.

Continue Reading

More in Cinema News

To Top