Connect with us

Cinema News

தேவைன்னா போய் பார்ப்பார்!. இல்லனா ஷூட்டிங்தான்!. விஜயை சீண்டும் புளூசட்ட மாறன்!..

Vijay TVK: நடிகர் விஜய் பல வகைகளிலும் அரசியல் நெருக்கடிக்கு ஆளானவர். அவர் நடிக்கும் படங்களில் எப்போது அரசியல்வாதிகளை சீண்டினாரோ அப்போதே அவருக்கு பிரச்சனைகள் துவங்கியது. அவரின் தலைவா படம் ரிலீஸில் போஸ்டரில் ‘Time to lead’ என போடப்பட்டிருந்தது.

அதற்காக பட ரிலீஸை 2 நாள் நிறுத்திவிட்டனர். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. படத்தை ரிலீஸ் செய்ய கோரிக்கை விஜயும், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவை சந்திக்க போனார்கள். ஆனால், உள்ளேயே விடாமல் இப்போது பார்க்க முடியாது என சொல்லி அப்படியே அனுப்பிவிட்டார் ஜெயலலிதா.

இது விஜய்க்கே அசிங்கமாகிப்போனது. ஆனால், ஜெயலலிதா முதல்வர் என்பதால் விஜயால் எதுவும் செய்ய முடியவில்லை. விஜயின் புலி படம் வெளியானபோது அவர் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது மோடியை சந்தித்தார் விஜய் அதன்பின் அவரின் சர்கார் படம் வெளியானபோது அந்த படத்தில் வரலட்சுமிக்கு வைத்த பெயரால் பிரச்சனை வந்தது.

அந்த படம் ஓடிய தியேட்டர்களில் பேனர்கள் கிழிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமியை சென்று பார்த்தார் விஜய். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி விஜய் பேசிய வசனம் பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த விஜயை கடுமையாக திட்டினார். இது எல்லாம் ஏற்படுத்திய கோபம்தான் விஜய்க்கு அரசியலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். மேடை கிடைக்கும்போதெல்லாம் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து வருகிறார்.

மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அவரின் கட்சி போராட்டம் நடத்தவில்லை என்றாலும் மக்கள் பிரச்ச்னை பற்றி அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில்தான், தொகுதி சீரமைப்பு என்கிற பெயரில் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசிக்கு திமுக சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விஜய் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் தலைவர் கலந்துகொள்ளும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார்.

இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘வாட் புரோ.. ராங் புரோ.. ‘தலைவா’ பிரச்னைக்கு கொடநாட்டில் முதல்வரை பார்ப்பார். ரெய்டு பிரச்னைக்கு கோவையில் பிரதமரை பார்ப்பார். ‘மாஸ்டர்’ பிரச்னைக்கு கோட்டையில் முதல்வரை சென்று பார்ப்பார். ஆனால் மக்களுக்காக பேச அனைத்துகட்சி மீட்டிங் போகாமல் ஷூட்டிங் போய்விடுவார்‌’என நக்கலடித்திருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top